Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருத்துக்களுடன் ரீடிவிட்; டிவிட்டரில் புதிய வசதி அறிமுகம்!

குறும்பதிவு சேவையான டிவிட்டர், கருத்துக்களுடன் ரீடிவிட் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

140 எழுத்துக்களில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டர் வலைப்பின்னல் சேவையில், ரீடிவிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. ரீடிவிட் என்பது இன்னொரு டிவிட்டர் பயனாளியின் குறும்பதிவை அப்படியே ஒருவர் தனது டைம்லைனில் பகிர்ந்து கொள்வதாகும். ரீடிவிட் செய்யப்படுவதற்கான அடையாளத்துடன் இந்த குறும்பதிவு வெளியாகும்.

ரீடிவிட் எண்ணிக்கை டிவிட்டரில் செல்வாக்கிற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. ரீடிவிட் வசதி பயனாளிகள் மிகவும் பிரபலமாக இருந்தாலும், அதில் ஒரு முக்கிய குறை இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். ரீடிவிட் செய்யும் குறும்பதிவு குறித்து ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க விரும்பினால் அதற்கான வழி இல்லாமல் இருந்ததே அந்த குறை.

தங்கள் கருத்துடன் ரீடிவிட் செய்ய விரும்பினால் ஒருவர், மூல குறும்பதிவின் இணைய முகவரியை காபி செய்து அதை பேஸ்ட் செய்து வெளியிட வேண்டும். இது சிக்கலானது என்பதோடு 140 எழுத்துக்களில் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டு விடும்.

இந்த குறையை தீர்க்கும் வகையில் டிவிட்டர் தற்போது கருத்துக்களுடன் ரீடிவிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, எந்த குறும்பதிவையும் ரீடிவிட் செய்யும் போது, அதன் மேல் பகுதியில் 'கமெண்ட்' எனும் பதத்துடன் அதற்கான கட்டமும் தோன்றும். இந்த கட்டத்தில் கருத்தை தெரிவித்து அந்த குறும்பதிவை மறுபதிவிடலாம்.

ரீடிவிட் செய்யப்படும் குறும்பதிவுடன் கூடுதல் தகவலை பகிர அல்லது அதனை மறுபதிவு செய்வதற்கான காரணத்தையும் விளக்க இந்த வசதி உதவும்.

டிவிட்டர் ரீடிவிட் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த பல சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த வசதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது.

இதேபோல டிரெண்டிங் பட்டியலில் இடம்பெறும் தலைப்புகளுக்கான விளக்கம் அளிக்கும் வசதியையும் டிவிட்டர் அறிமுகம் செய்துள்ளது.

-சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்