Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மாடியோவ்: ஒரே நாளில் 20 லட்சம் போன்கள் விற்று கின்னஸ் பட்டியலில் ஜியோமி!

ஸ்மார்ட்போன் உலகை கலக்கி வரும் சீன நிறுவனமான ஜியோமி, ஒரே நாளில் 20 லட்சம் ஸ்மார்ட் போன்களுக்கு மேல் விற்பனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் ஜியோமி, ஸ்மார்ட்போன் உலகில் தனது பட்ஜெட் போன்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவிலும் ஜியோமி, ஆன்லைன் விற்பனை மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜியோமி சமீபத்தில் சீனாவில் சிறப்பு ஆன்லைன் விற்பனையை அறிவித்தது.

நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டு நிறைவடைவதை முன்னிட்டு 'எம்.ஐ பேன் பெஸ்ட்' எனும் பெயரில் இந்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து 24 மணி நேரத்திற்குள், 21 லட்சத்திற்கும் மேல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆனதாக ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சான்றிதழும் கிடைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் தவிர, துணை பொருட்களும் லட்சக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளதாக ஜியோமி தெரிவித்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நாடு முழுவதும் உள்ள ஜியோமி மையங்கள் மூலம் 12 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- சைபர்சிம்மன்





 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ