Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூடியூப்பை கலக்கும் விவசாய பாட்டு!

யூடியூப்பில் லேட்டஸ்ட்டாக ஹிட்டாகி இருக்கும் வீடியோ அது. வழக்கமான ஹிட் வீடியோக்கள் போலவே  இதிலும் பாட்டும் உண்டு. ஆட்டமும் இருக்கிறது. ஆனால் இந்த பொழுதுபோக்கு அமசங்களுக்காக மட்டும் இந்த பாட்டு ஹிட்டாகவில்லை. அதன் பின்னே இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவான செய்திக் காக இந்த பாட்டு கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த யூடியூப் பாடல் வீடியோவை நார்வே நாட்டைச்சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் உருவாக்கி இருக் கின்றனர். இந்த மாணவிகள் இசைக்குழு ஒன்றையும் நடத்தி வருபவர்கள். இந்த குழு சார்பாக தான், நார் வேக்கு விவசாயிகள் தேவை எனும் பெயரிலான இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். பச்சை நிற ஆடை அணிந்த படி காட்சி தரும் இந்த பெண்கள் டிராக்டர் ஓட்டியபடி, மாடுகளை மேய்த்தபடி இந்த வீடியோவில் காட்சி அளிக்கின்றனர்.

இவற்றின் நடுவே ஆடி, பாடியபடி நார்வே நாட்டு பாரம்பரிய விவசாயத்தின் புகழை போற்றி பாடுவதோடு, தற்போது அந்நாட்டு விவசாயத்திற்கு வந்திருக்கும் சோதனைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு காட்சியில் இந்த பெண்கள், அந்நாட்டு விவசாயத் துறை அமைச்சர் சில்வி லிஸ்தாக் போல தோற்றம் தருபவரை விரட்டிச்செல்கின்றனர்.

லிஸ்தாக் அங்கம் வகிக்கும் அரசு,  நார்வே நாட்டில் விவசாயத்திற்கு வேட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட் டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த அரசு விவசாயிகளுக்கான சம்பளத்தை குறைப்பது உட்பட பல் வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. அதே போல விவசாய பண்ணை நிலத்தில் வாழ்வதை கட்டாயமாக்கும் சட்டத்திலும் மாற்றம் கொண்டு வர உள்ளது.

இந்த நடவடிக்கைகள் நார்வேயில் உச்சத்தில் இருக்கும் உணவுப்பொருட்கள் விலையை குறைக்க உதவும் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், விவசாயத்தை அழிக்கும் முயற்சியாக இது அமையும் என பலரும் கருதுகின்றனர்.

இது தொடர்பான விவாதம் நடைபெற்றும் வரும் நிலையில், இந்த பெண்கள் யூடியூப் வீடியோ மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.

விவசாயத்தை பாதிக்கும் எந்த பெரிய மாற்றத்தையும் எதிர்ப்பதாக, இந்த வீடியோவுக்கான பாடலை எழுதிய கினா மேரி ஓவாலே கூறுகிறார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே இந்த பாடலின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். தாங்கள் எந்த விவசாய குழுவையும் சாராதவர்கள் என்றும், ஆண்டு இறுதி போட்டிக்காக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ பதிவை தோழிகளே எடிட் செய்து பதிவேற்றியதாகவும் பெண்கள் இசைக்குழுவின் தலைவர் ஹெலென் மெல்சர் கூறியுள்ளார்.

இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பலரும் இதை ஜாலியான வீடியோவாக பார்ப்பதாக அவர் வேதனை தெரிவிக்கிறார். ஆனால், நார்வேயில் நடைபெற்று வரும் விவசாயம் தொடர்பான விவாதத்தின் மீது இந்த வீடியோ விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ