Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இ-மெயில்களில் ஜிஃப்களை அனுப்பும் வசதி அறிமுகம்!

மெசேஜிங் யுகத்தில் இமெயில் அலுப்பூட்டக்கூடியதாக நீங்கள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். இ-மெயில் சேவையை இன்னும் சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றும் வகையில் அசையும் படங்களான ஜிஃப்களை மெயிலில் அனுப்பி வைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.

அசையும் படங்களான ஜிஃப்கள், இணையத்தில் பிரபலமாக இருக் கின்றன. முழு படமும் அசையாமல் அதன் ஒரு பகுதி மட்டும் அசைவுகளை கொண்டிருப்பதுதான் ஜிஃப்களின் சுவாரஸ்யமான அம்சம். ஜிஃப்களை பயன்படுத்துவது இன்னும் சுவாரஸ்யமானது.

ஜிஃப் களை வீடியோ காட்சியில் இருந்து உருவாக்கலாம்.
ஜிஃப்களை உருவாக்குவதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும் என்றாலும் இணையத்தில் ஜிஃப்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இவற்றை எளிதாக தேட உதவும் தேடியந்திரமான ஜிஃப்பியும் இருக்கிறது. இணையவாசிகள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வரும் இந்த தேடியந்திரம்தான் இப்போது ஜிஃப்களை இமெயிலுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜிஃப்பி அறிமுகம் செய்துள்ள குரோம் நீட்டிப்பு சேவை மூலம், மெயில் அனுப்பும்போது அதனுடன் ஜிஃப் அசையும் படங்களையும் அனுப்பலாம்.

ஜிஃப்பி நீட்டிப்பு சேவையை டவுன்லோடு செய்ததும், ஒவ்வொரு முறை ஜிமெயில் மூலம் இமெயில் அனுப் பும் போதும், வழக்கமாக பார்மெட்டிங் பகுதியில் தோன்றும் வசதிகளுடன் ஜிஃப் ஐகானும் இருக்கும். ஆக, பதில் மெயிலில் ஏதேனும் ஜிஃப்களை சேர்க்க விரும்பினால், இந்த ஐகானில் கிளிக் செய்து, விரும்பிய அசையும் படங்களை தேர்வு செய்து அனுப்பலாம்.

ஆக, ஸ்மார்ட்போனில் மெசேஜிங் செயலியில் இமோஜிகளை இணைப்பது போல இனி இமெயிலிலும் ஜிஃப் களை இணைத்து அனுப்பலாம்.

- சைபர்சிம்மன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close