Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா வருகிறது மேலும் ஒரு சீன ஸ்மார்ட்போன்!

ஜியோமி, ஜியோனி வரிசையில் மேலும் ஒரு ஸ்மார்போன் சீனாவில் இருந்து இந்தியாவில் அறிமுகமாகிறது. சீனாவின் மெய்சூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 18-ம் தேதி அறிமுகமாகிறது.

இந்தியா ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளரும் சந்தையாக இருப்பதால் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்ட்களை கவர்ந்து வருகிறது. சர்வதேச நிறுவனங்கள் தவிர சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், இந்தியாவில் தங்கள் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக சீனாவின் ஜியோமி நிறுவனம் இந்தியாவில் சூறாவளியாக அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, மேலும் பல நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதிக்க விரும்புகின்றன.

இந்த வரிசையில் சீனாவின் மெய்சூ இந்தியாவில் நுழைகிறது. இந்நிறுவனம் தனது மெய்சூ எம் 1 நோட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. வரும் 18-ம் தேதி இந்த போன் அறிமுகமாகும் என நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நிறுவனம் எந்த குறிப்பிட்ட மாதிரி போன் என்பதை தெரிவிக்கவிட்டாலும், இது மெய்சூ 1 நோட் மாதிரியாக இருக்கும் என பரவலாக கருதப்படுகிறது.

மெய்சூ எம் 1 நோட் 5.5 இன்ச் திரை கொண்ட இந்த போன் கார்னிங் கொரில்லா கிலாஸ் பாதுகாப்பு கொண்டது, மீடியாடெக் பிராசஸர் கொண்ட இது 2 ஜிபி ரேம் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4.4 இயங்குதளத்தில் செயல்படுகிறது. முன்பக்க மற்றும் பின்பக்க காமிராக்களுடன் 3,140 எம்.ஏ.எச் பாட்டரி கொண்டுள்ளது. இதன் விலை ரூ13,800 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

மெய்சூவின் இந்தியா அறிமுகம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கான பிரத்யேக் பேஸ்புக் பக்கத்தை அமைத்து தனது தயாரிப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வந்தது. இந்நிலையில் மெய்சூ எம் 1 நோட் அறிமுகத்தை அறிவித்துள்ளது.

-சைபர் சிம்மன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close