Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கும் எப்போதும் தைரியமாய் பயணிக்க எமர்ஜென்சி ஸ்கிரீன் சேவர்!

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலரின் தேவைகளை தீர்த்து வைக்கின்றத `ஸ்மார்ட் போன்கள்’.

இந்த போன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக பலவிதமான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்  குவிந்துக்கிடந்தாலும், இன்றைய பிரச்னைகளை மையமாக வைத்து, புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்களை (ஆப்ஸ்) பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில், 6 வகையான 'ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்’களை உருவாக்கி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர், திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.கே.பி தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள்.

இந்த கண்டுப்பிடிப்புகள்  பற்றி பேசிய 'சென்டர் ஃபார் எக்செலன்ஸ்’(Centre of Excellence) மையத்தின் இயக் குநர் நாகராஜன், "எங்கள் கல்லூரியில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 36 பேரை தேர்வு செய்து கடந்த 10 மாதங்களாக பயிற்சி அளித்து, புதிய அப்ளிகேஷன்களை உருவாக்க செய் தோம். இதில் இந்த ஆண்டு 6 வகையான அப்ளிகேஷன்களை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இன்போசிஸ் நடத்திய கல்லூரிகளுக்கிடையிலான அப்ளிகேஷன்கள்  உருவாக்கும் போட்டியில், எங்கள் கல்லூரி சார்பில் உருவாக்கப்பட்ட எமர்ஜென்சி ஸ்கிரின் சேவர் (Emergency Screen Saver) அப்ளிகேஷனை இயக்கி முதல் பரிசு பெற்றுள்ளனர்“ என்றார்.

மாணவர்கள் இயக்கி காட்டிய 6 வகையான அப்ளிகேஷன்களின் செயல்பாடுகள் இதோ…

திருவண்ணாமலை ஆப் (Tiruvannamalai App)

இந்த அப்ளிகேஷனை பொது மக்களின் பயன்பட்டிற்கு வெளியிட்டுள்ளோம். இந்த `ஆப்’பை அனைத்து ஆன்ட்ராய்டு போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் திருவண்ணாமலையில் இருக்கும் அஷ்டலிங்கம், ஆஸ்ரமங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையம், தினசரி திருவண்ணாமலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த அப்ளிகேஷன் மூலம் கிரிவலம் வரும்போது, நண்பர்களுக்கு நாம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கலாம். நேவிகேட்டர் உதவியுடன் நண்பர்கள் நம்மை வந்தடையலாம். மேலும், அவசர உதவிக்கு போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு எண்  போன்றவைகளும் இந்த ஆப்ஸில் இடம்பெற்றுள்ளன.

ஸ்டே சேப் (stay Safe)

ஆட்டோ, கார் என  தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பயனுள்ள அப்ளிகேஷன் இது. இதன் மூலம் பயணம் செய்யும் போது, தாங்கள் பயணம் செய்யும் வாகனம், அவற்றின் பதிவு எண்ணை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கலாம். மேலும், நாம் பயணத்தில் இருக்கும்போது, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் நாம்  இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டே இருக்கும். நாம் பத்திரமாக வந்துசேர்ந்த பிறகு, அப்ளிகேசனை ஆப் செய்யாவிட்டால் போன் ஸ்கிரீனில் நினைவூட்டலாக நிற்கும்.

எமர்ஜென்சி ஸ்கிரீன் சேவர் (Emergency Screen Saver)

இந்த அப்ளிகேசன் மூலம் அவரச உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி, மருத்துவர் எண், ரத்த வகை, நமக்கு இருக்கும் மருத்துவ ரீதியான பிரச்னைகள் போன்ற முக்கியமான தகவல்களை ஸ்கிரீன் சேவராக போனில் வைத்துக்கொள்ளலாம். ஆபத்தில் சிக்கி இருக்கும்போது, மொபைல் போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த தகவல்கள் அனைத்தையும் படிக்க முடியும்.

ஸ்டூடண்ட் டியூட்டர் புரோகிராம் (Students Tutor Programme)

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன், கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மட்டும் பயன்படுத்த முடியும்.  பாடத்தில் சந்தேகம் இருக்கும் மாணவர்களுக்கு, அந்தப் பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கு உதவும் அப்ளிகேஷன் இது.

இகோ (Feedback Management)

கல்லூரி நிர்வாகம், மாணவர்களிடம் கல்லூரியில் உள்ள குறைகள் போன்றவற்றை கருத்துக்கணிப்பு எடுக்க உதவும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன். இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் எளிதாக மாணவர்கள் தங்களது கருத்துக்களையும், குறைகளையும் பதிவு செய்ய முடியும்.

புக் சோஷியோ
(Book Socio)

இந்த அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் தங்களுடைய பாடபுத்தகங்களை பிற மாணவர்களுக்கு விற்பனை செய்யவும், பிற மாணவர்களிடமிருந்து வாங்குவதற்கும் உதவுகின்றது. இதனை கல்லூரியில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று எஸ்கேபி என்றோ அல்லது  ஆப்ஸ் பெயர்களை டைப் செய்தோ  பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

-காசி.வேம்பையன்

படங்கள்:கா.முரளி
   
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ