Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் ஸ்டேட்டஸில் எந்த வார்த்தை இடம்பெறக்கூடாது?

நீங்கள் செய்யும் வேலையை யாராவது கவனித்தாலே நமக்கு கோபம் வரும், நாம் யாரோடாவது பேசும் தகவல்களை யாராவது படித்து கொண்டிருந்தால் அதனை நாம் எப்படி எடுத்து கொள்வோம். கிட்டத்தட்ட அப்படி ஒரு விஷயத்தை ஃபேஸ்புக் தானியங்கி ப்ரோக்ராம்கள் மூலம் செய்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உங்கள் ஸ்டேட்டஸ்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஆட்டோமேட்டிக்காக படிக்கப்படுகிறது. இது சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது. 
 
 
சமீபத்தில் டெல்லியில் படிக்கும் பெண் ஒருவர் தனக்கு வந்த ஆபாச குறுஞ்செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ஆனால் அந்த பதிவை ஆபாச வார்த்தைகள் உள்ள பதிவு என ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கிவிட்டது. அதேபோல் சமீபத்தில் ஸ்பாம் வைரஸ்கள் பரவுவது குறித்து ஒருவர் இட்ட பதிவில் ஸ்பாம் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என்று அந்த செய்தியை பகிரும் வசதியையும் நீக்கிவிட்டது ஃபேஸ்புக்.
 
ஃபேஸ்புக் சில வார்த்தைகளை பயன்படுத்தினால் அந்த பதிவுகளை நீக்கியோ அல்லது அதனை மற்றவர்களோடு பகிர முடியாமலோ, இல்லை அந்த பதிவை அதிக பேருக்கு காட்டாமலோ செய்துவிடுகிறது.அவை எதுபோன்ற வார்த்தைகள் என்பதை பார்ப்போம்.
 
 
1.உங்கள் பதிவு கூடியமட்டில் உங்களது சொந்த பதிவாக இருப்பது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் புகைப்படம் வேறு ஏதாவது தடைசெய்யப்பட்ட தளத்தை சார்ந்ததாக இருந்தால் கூட ஃபேஸ்புக் அந்த புகைப்படத்தை ஏற்காது.
 
2.உங்கள் பதிவில் செக்ஸ் தொடர்பான வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள், ஸ்பாம் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தால் அந்த பதிவை ஃபேஸ்புக் நீக்கிவிடும். அதோடு உங்கள் பதிவை ஸ்பாம் பதிவாகவும் அறிவித்துவிடும். தனிப்பட்ட கணக்குகளில் பதிவை நீக்கியும், பக்கங்களில் பதிவை பகிர்வதை தடுத்து விடுகிறது ஃபேஸ்புக்.
 
3.உங்கள் பதிவை நிறைய நபர்கள் ரிப்போர்ட் செய்து ஸ்பாம் என கூறினாலும் அந்த பதிவையும், சில சமயங்களில் உங்கள் பக்கத்தையும் கூட ஃபேஸ்புக் நீக்கிவிடும்.
 
4.தனிநபரை விமர்சிப்பதோ அல்லது ஒரு நாட்டை அல்லது சமூகத்தை பற்றிய பதிவை பதிவு செய்து அதன் மீது அவர்களோ அல்லது மற்றவர்களோ புகர் செய்தாலோ ஃபேஸ்புக் அந்த பதிவை நீக்கிவிடும். மேலும் இதனை ஆதாரமாக வைத்து வழக்கு பதிவு செய்யலாம் என்பதால் ஃபேஸ்புக் இது போன்ற பதிவுகளை புகார் அளித்தவருக்கு தந்தும் விடுகிறது.
 
சாதகங்கள்:
 
இதன் மூலம் நன்மைகள் அதிகம் உள்ளன. ஃபேஸ்புக் இதனை செய்வதால் ஆபாச ஆசாமிகள், ஆபாச பதிவுகளை வைரஸ்களாக அனுப்புபவர்களை தடுக்க முடியும். நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் நீங்கள் அனுப்பிய பதிவு தானே என நினைத்து ஸ்பாமை பார்க்கும் போதே முகம் சுழிக்கிறார்கள்.இது போன்ற விஷயங்களால் அந்த நிலையை தவிர்க்கலாம். 
 
பாதகங்கள்:
 
சில சமயங்களில் ஆபாச வார்த்தைகளையும், நாட்டை அவமதிக்கும் அல்லது முக்கிய பிரமுகர்களை இழிவுபடுத்தும் செய்திகளை பதிவிடுவதை பற்றிய நமது பார்வையை அந்த விஷயத்தை கூறி சொல்லும் போது அதனையும் ஸ்பாம் செய்தி என நினைத்து தடை செய்வது பின்னடைவு தான்.
 
 
என்னதான் சரி, தவறு என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டாலும் நமது தகவல்கள் எங்கு ஃபேஸ்புக்கால் நம் தகவல்கள் படிக்க படுகிறதோ என்ற விஷயம் மட்டும் நம்மை அச்சுருத்துவதாகவே உள்ளது. இருந்தாலும் நமது தகவல்கள் தானியங்கியாக படிக்கப்படுகிறது என்பதால் இதனை ஏற்றுக்கொள்ளலாம். ஃபேஸ்புக்கும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் சில தவறுகளை முன்வைக்கும் போது அதனை ஆராய்ந்து அந்த கருத்துக்களை மதித்து அந்த பதிவுகளை அப்படியே விட்டால் அது பலரது பாதுகாப்புக்கு உதவும். ஃபேஸ்புக் வருங்காலத்தில் இந்த விஷயங்களை மேம்படுத்தும் என நம்புவோம்.
 
- ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ