Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தக வடிவில் விக்கிப்பீடியா!

'முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை' என்று பல பேர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி சொன்னவர்களில் பாதி பேர் முயன்றதே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், மாண்டிபெர்க் முயன்றும் விட்டார், முயன்றதில் வெற்றியும் பெற்று விட்டார்.

கட்டற்ற தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் விக்கிபீடியாவை இணையத்தளத்தில் கண்டு ஆச்சர்யப்பட்டவர்கள் நிறைய உண்டு. அவை அத்தனையும் புத்தமாக வந்தால்?

என்ன மயக்கம் வருகிறதா?

ஆம், விக்கிப்பீடியாவின் அனைத்து பக்கங்களும் அச்சு வடிவில் வெளிவருகிறது என்பதுதான் ஆச்சர்யப்பட வைக்கும் உண்மை. கற்பனை செய்து பார்க்கவே சற்று சிரமமாகதான்இருக்கும் இந்த தகவல். 5 லட்சம் பக்கங்களில், 7,600 பாகங்களாக வெளி வருகிறது விக்கிபீடியா.

நியூயார்க்கை சேர்ந்த மைக்கேல் மாண்டிபெர்க் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனி ஒருவராக விக்கிபீடியாவிலுள்ள மொத்த தகவல்களையும் திரட்டியுள்ளார்.

இதற்காக இவர் ஒரு புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளார். அதை தற்போது புத்தகமாக உருவாக்கியுள்ளார். இதற்காக இவர் 2009ஆம் ஆண்டு முதலே விக்கிபீடியாவில் உள்ள தகவல்களை சேகரித்து வருகிறார். இதற்காக 3.20 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

தற்போது புத்தக வடிவமைப்பு நிறைவடைந்ததையடுத்து, 'நியூயார்க் ஈஸ்ட் வில்லேஜ்' என்ற இடத்தில் கண்காட்சிக்கு மைக்கேல் ஏற்பாடு செய்துள்ளார். அந்த கண்காட்சியில் 5 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், வெறும் 11 ஜிபி கோப்புகளாக மாற்றி வைக்கப்படவுள்ளது.

கண்காட்சியில் 1980 பாகங்களின் மாதிரிகள் சுவரோவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. விக்கிபீடியாக்கு கட்டுரைகள் அளித்து உதவியவர்கள், தகவல் அளித்து உதவியவர்கள் என 75 லட்சம் பேரின் பெயர்கள் 7600 தொகுப்புகளில், 36 தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

7,600 பாகங்களும் விற்பனைக்கு வரும் எனவும், விலை சுமார் 3.18 கோடி ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனி ஒரு பாகம் மட்டும் 5,000 ரூபாய்.

இன்னொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் இந்த மொத்த தொகுப்பையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய 14 நாட்கள் ஆகுமாம்.

இப்பேர்ப்பட்ட சாதனையை செய்திருக்கும் மைக்கேல் மாண்டிபெர்க், 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விக்கிபீடியாவுக்காக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலே மாண்டிபெர்க்! முயன்றால் முடியாதது எதுவுமில்லை...!

-ஜி.கே.தினேஷ் (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close