Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2ஜியில் கூட செல்ஃபியை ஷேர் செய்ய வைக்கும் ஃபேஸ்புக் லைட்!

உங்களிடம் செல்போன் இருக்கிறதா? என்ற கேள்வி மாறி, ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்ற கேள்வி வரும் அளவுக்கு ஸ்மார்ட்போன்கள், மக்களிடம் சென்றடைந்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட்போன்கள் சென்றடைந்த அளவுக்கு இணையதள சேவை சென்றடைந்ததா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது. இன்னும் பல ஊர்களில் 3ஜி சேவை சென்றடையாத நிலைதான் உள்ளது. இதற்காக புதியதாக ஒரு ஆப்ஸை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 
 

 
மிக குறைவான இணையதள வேகம் உள்ள இடம் மற்றும் 2ஜி சேவை மட்டுமே உள்ள இடம் ஆகியவற்றில் சிறப்பான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக இந்த ஆப்ஸை ஃபேஸ்புக் வடிவமைத்துள்ளது. ஃபேஸ்புக் ஆப்ஸை போன்றே உள்ள இந்த ஆப்ஸ் மூலம், குறைந்த இணைய வேகத்தில் ஃபேஸ்புக்கை பயன்படுத்த முடியும். இந்த ஆப்ஸின் அளவு என்பது வெறும் 435k என்ற அளவில்தான் உள்ளது. ஆண்ட்ராய்டு 2.2 இயங்குதளத்தில் துவங்கி, அனைத்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இயங்கும், மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது.
 
இந்த ஆப்ஸ் மூலம் கிராமங்களையும், சாதாரண மக்களையும் சென்றடைய முடியும் என்று ஃபேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை இணையதளம் சென்றடையாத 4.5 பில்லியன் மக்களை சென்றடைய போவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். இந்தியாவில் மொத்தம் 112 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும், அதில் 99 மில்லியன் பேர் செல்போன் மூலமாக பயன்படுத்துபவர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
இனி செல்ஃபி எடுக்கும் தலைமுறைகள் 2ஜி மற்றும் அதற்கு குறைவான இணைய வேகம் உள்ள இடத்தில் கூட செல்ஃபிக்களை இந்த ஃபேஸ்புக் லைட் ஆப்ஸ் மூலம் முடியும் என்று கூறுகிறது ஃபேஸ்புக்.
 
ஃபேஸ்புக் லைட் ஆப்ஸை ட்வுன்லோடு செய்ய: http://bit.ly/1LA0FR2
 
-ச.ஸ்ரீராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close