Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக் போஸ்டை இனி பிரைவேட் மெசேஜிலும் பகிரலாம்..!

'நாள் முழுக்க சாப்பிடாமல் கூட இருப்போம்... ஆனால், ஃபேஸ்புக் பக்கம் வராமல் இருக்கமாட்டோம்’ என்னும் அளவுக்கு ஃபேஸ்புக் மோகம் நம்மில் அதிகமானோரை ஆட்டிப்படைத்து வருகிறது. காரணம், அடுத்தடுத்த புதிய வசதிகளால் வாடிக்கையாளர்களை சலிப்பூட்டாமல் கவர்ந்து வருவதை ஃபேஸ்புக் தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளதுதான். அந்த வகையில் தற்போது ஃபேஸ்புக் அமைதியாக இன்னும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

'ஃபேஸ்புக் போஸ்டை உங்களது நண்பர்களின் பிரைவேட் மெசேஜில் இனி பகிரலாம்’ என்பதுதான் அது. இந்த வசதியானது தற்போது வெப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தனிப்பட்ட பயனர்களின் போஸ்ட் அல்லது வேறு பக்கத்தில் உள்ள போஸ்ட் என எது ஒன்றையும், ஒருவர் அல்லது பல நண்பர்களின் பிரைவேட் மெசேஜில் நாம் எளிதாக பகிரலாம்.

எப்படி பகிர்வது?

ஒரு போஸ்டின் கீழ் உள்ள share ஆப்ஷனை கிளிக் செய்ததும் 'Share Now', 'Share' மற்றும் 'Send as message' என்ற 3 தேர்வுகள் இருப்பதை பார்க்கலாம். அதில், Send as message என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் 'Send This Status’ என்ற பாக்ஸ் ஒன்று தோன்றும். அதில்.. 'To:’ என்னும் இடத்தில் அந்த போஸ்டை நீங்கள் யாருக்கெல்லாம் பகிர விரும்புகிறீர்களோ அவர்களது ஃபேஸ்புக் பெயரை டைப் செய்யவேண்டும். பின் அதன்கீழே உள்ள ’Say Something about this...’ பெட்டியில் அது குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களை டைப் செய்து.. கீழே உள்ள ’Send Message’ என்ற பட்டனை கிளிக் செய்து பகிரலாம். 

இந்த புதிய ஃபேஸ்புக் வசதி தற்போது அப்டேட் செய்யப்பட்ட ஆண்டிராய்ட் அப்ளிகேஷனிலும் உள்ளது. அதில் 'Send as message' தேர்வை தேர்வு செய்து விரும்பும் நண்பர்களுக்கு பகிரலாம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த வசதி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வந்துள்ளது. சில பயனர்கள் இந்த வசதியை வெப் மற்றும் மொபைல் ஆப் வழியாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

''இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட வசதி இன்னமும் கிடைக்காதவர்கள் இன்னும் சில தினங்கள் காத்திருக்கலாம். ஏனென்றால் பரிசோதனை முயற்சியாக தற்போது இந்த வசதி சில பயனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆகவே உறுதியாக அறிவித்த பின் இந்த வசதியை அனைவரும் பெறலாம்’’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

- சா.வடிவரசு

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ