Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விண்டோஸ் 10 வெளியான ஒரேநாளில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம்!

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பு வெளியான 24 மணி நேரத்தில், சுமார் ஒன்றரை கோடி பேர் இலவசமாக பதிவிறக்கம் செய்து தரம் உயர்த்திக் கொண்டு உள்ளனர்.

மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ் 8 பதிப்பு பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ் 9 பதிப்பு வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் விண்டோஸ் 10 பதிப்பு வெளியிடப்பட்டது.

பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ் 10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக்கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, விண்டோஸ் 10 பதிப்பை விண்டோஸ் 7, 8 மென்பொருட்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 பதிப்பை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்துபவர்கள், மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பு வெளியான 24 மணி நேரத்திற்க்குள் சுமார் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கத் துவங்கி உள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்து உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close