Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஆறு வகையான ஸ்மார்ட்போன் பயனாளிகள்!

ஸ்மார்ட்போன் பயனாளிகளில் பல ரகத்தினர் இருக்கின்றனர். பெரும்பாலானோர் மணிக்கணக்கில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் பயன்படுத்தும் விதம் மாறுபடவே செய்கிறது. சிலர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றில் மூழ்கியிருக்கலாம். இன்னும் பலர், எப்போதும் கேம் ஆடிக் கொண்டிருக்கலாம். வீடியோக்களை அதிகம் பார்த்து ரசிப்பவர்களும் இருக்கின்றனர்.

எனினும், ஸ்மார்ட்போன் பயனாளிகளை அவர்கள் தன்மைக்கேற்ப வகைப்படுத்திவிடலாம். இப்படி, இந்தியாவை பொறுத்தவரை ஆறு வகையான ஸ்மார்ட்போன் பயனாளிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. வி சர்வ் எனும் செல்போன் ஆய்வு நிறுவனம், இந்திய ஸ்மார்ட்போன் பயனாளிகளை வகைப்படுத்தி இன்போகிராபிக் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஆறு வகை பயனாளிகள்...

1. செயலி பிரியர்கள்:- மாதந்தோறும் அதிக அளவில் செயலிகளை டவுன்லோடு செய்து பயன்படுத்துபவர்கள். அநேகமாக இந்த பிரிவினர், 18 வயது ஆண்கள். மெட்ரோக்களில் வசிப்பவர்கள்,. மாணவர்கள்.

2. சமூக நட்சத்திரங்கள்:- இந்த வகை பயனாளிகள் நாள் ஒன்றுக்கு தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுபவர்கள். இவர்கள் பெரும்பாலும் இளசுகள், படித்தவர்கள், பெண்பாலரே அதிகம். மெட்ரோ மற்றும் மினி மெட்ரோ வாசிகள்.

3. உரையாடுபவர்கள்:- செல்போனை ஒழுங்காக பயன்படுத்துபவர்கள். அதாவது, அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். செயலிகள் என்றால் என்ன? என கேட்கக் கூடியவர்கள். 25 வயதிற்கு மேலானவர்கள். பெண்கள் அதிகம். திருமணமானவர்கள்.

4. பொழுதுபோக்கு விரும்பிகள்:- ஸ்மார்ட்போன் கேம் ஆடவும், வீடியோ பார்க்கவும் கிடைத்த சாதனம் என நினைப்பவர்கள். பாட்டு கேட்பதும், இணையத்தில் உலாவதும் பிடித்தமானது. இளைஞர்கள், ஆண்கள், மாணவர்கள். மினி மெட்ரோ வாசிகள்.

5. பயனாளிகள்:- ஸ்மார்ட்போன் செயலிகளை, பயன்பாட்டு நோக்கில் அணுகுபவர்கள். குரல் வழி சேவை மற்றும் மெசேஜிங் வசதிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், திருமணமானவர்கள்.

6. சும்மா:- ஸ்மார்ட்போனை அடிக்கடி பயன்படுத்தாத அப்பாவிகள். இணைய சேவை மற்றும் செயலிகள் பக்கமே போகாதவர்கள். மெட்ரோக்களில் வசிக்கும் திருமணமான பெண்கள்தான் இதில் அதிகம்.

முழு இன்போகிராபிக்:- http://www.vserv.com/unveiling-smartphone-user-persona-report-supr-2015-india/

                                                                                                                                                                      - சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ