Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூளை இல்லையா...கவலை வேண்டாம்!

உனக்கு மூளையே இல்லையா ?- எவ்ளோ பெரிய புத்திசாலியா இருந்தாலும் சரி  இப்படியொரு கேள்விய  கண்டிப்பா எல்லோரும் வாழ்க்கைல  கடந்து வந்திருப்பாங்க.

ஒரு வேளை உங்களுக்கு  உண்மையாவே மூளை இல்லனாலும் கவலைப்படாதீங்க, அமேசான் காடுகளில் அரிய வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரி, அமெரிக்காவின் அரியவகை புத்திசாலிகளால் தயாரிக்கப்பட்ட மூளை ஒன்று காத்துக்கிட்டிருக்கு நம்மைப் போன்றவர்களுக்காகவே. ஆமாங்க உண்மைதான்.. உலகின் முதல் செயற்கை மூளை படைக்கப்பட்டுவிட்டது.


கொலம்பஸில் உள்ள ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரேனி ஆனந்த் என்பவரது பல நாள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சாதாரண முயற்சி அல்ல, மனித மூளையின் முடிச்சுகளை அவிழ்க்கப் போகும் அசாதாரண முயற்சி. அந்த முயற்சியின் பலன் என்ன தெரியுமா ? ஐந்து வார வயதுடைய ஒரு குட்டி மூளை.

நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கும் நம்முடைய மூளைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மூளையைப் பற்றி ஆராயும் போது நோய்க்கான காரணத்தையும் கண்டறியலாம். மூளையைப் பற்றி ஆராயும் போதே  இப்படி என்றால், புதிதாக ஒரு மூளையை நாமே உருவாக்கினால் என்ன நடக்கும்? மனித உடலில் ஏற்படும் அத்தனை மாற்றங்களையும் கண்டறியலாம் அல்லவா. நமக்கு ஏற்படும் நோய்களுக்கான காரணங்களையும் எளிதாக கண்டறியலாம் அல்லவா. இப்படியொரு  ஐடியா வந்ததால்தானே சும்மா இருக்காம ஆராய்ச்சி பண்ணி, அதுல வெற்றியும் பெற்றுவிட்டார் ரேனி ஆனந்த்.

இப்ப இவங்க கண்டுபிடிச்சிருக்குற மூளை, ஒரு அழிப்பான் (eraser) அளவே உள்ள 35 நாள் வயதுடைய குட்டி மூளை.

ஆனால் இது கிட்டத்தட்ட மூளையோட செயல்பாடுகள் அனைத்தையும் கொண்டது. இந்த சின்ன மூளைக்குள்ளயே  சிறுமூளை, உணர் நரம்புகள், ரெட்டினா மற்றும் இன்னும் பிற 99% மூளையின் பகுதிகள் இருக்காம். இவங்க குழு ஏற்கனவே உருவாக்குன ஒன்பது வார வயதுடைய மூளை சரியா வேலை செய்யாம, தோல்வியில் முடிஞ்ச பிறகு உருவாக்கப்பட்டிருக்கு இந்த மூளை. இது இவங்களோட எல்லாவிதமான நோக்கத்தையும் நிறைவேற்றியிருக்காம்.

இந்த மூளை மூலமா அல்சைமர் (ஞாபகக் குறைபாடு), பார்கின்சன்(  நடுக்க வாதம் ) மற்ற மரபு வழி குறைபாடு போன்ற நோய்களுக்கான காரணத்தையும், தீர்வையும் ரொம்ப எளிமையா கண்டுபிடிக்கலாம்.

இதுகுறித்து ஆனந்த சொல்லும் போது "நம்மோட ஸ்டெம் செல்ஸ் எடுத்து அதன் மூலமா நமக்கான மூளையை உருவாக்கி, மரபு ரீதியா நமக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றம், குறைபாடுகள், நினைவுகள் எல்லாற்றையும் மீண்டும் சரிசெய்லாம்" என்றார். புரியுற மாதிரி  சொல்லனும்னா நம்மகிட்ட உள்ள போதி தர்மர்ல பாதி தர்மர கொண்டு வரப்போறாங்களாம்.

இந்த மூளைக்கு சுயமா சிந்திக்கிற திறன் மட்டும ரொம்ப கம்மியாம்.இப்போதைக்கு இந்த மூளையை ஆராய்ச்சிகளுக்கும், மருத்துவப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப் போறாங்களாம்.

இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வாங்காததால் இந்த மூளையை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடாம அமைதியா உள்ளது ஆராய்ச்சி குழு.

இந்த மூளை ஒருவேளை சுயமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டா,  'சிட்டி தி ரோபோட்'  மாதிரி என்ன வேணாலும் செய்யலாம். மனிதன் இப்படி புதுப் புது கண்டுபிடிப்புகள் மூலம்  ஒவ்வொரு முறை வளரும் போதும் பாப் மார்லியின் வார்த்தைகள்தான் ஞாபகம் வருகிறது.

"மனிதன கடவுளாக மாற வேண்டும் என்றால் கடவுள் செய்வதையே செய்ய வேண்டும், அதுதான் படைத்தல்."- மனிதன் படைக்கத் தொடங்கிவிட்டான்...!

சியாம் சுந்தர்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ