Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுவனுக்கு கைகொடுத்த முப்பரிமாண கை!

ண்டனில் உள்ள சிறு பள்ளியான பாந்த்ரஹூண்டா தொடக்கப் பள்ளியில் படிக்கும் சியான் மோரிஸ் என்ற சிறுவன் எப்பொழுதும் போல அன்று வகுப்பறைக்குள் நுழைந்தான். ஆனால்  அவன்  நண்பர்கள் அனைவரும் அவனை அப்போது புதிதாகவும், அதிசயமாகவும் பார்த்தனர். படிப்பில் சுட்டியான அவன், பதில் சொல்ல கை உயர்த்தியபோது எல்லாரும் ஆரவாரமாக கை தட்டினார்கள்....அவன் பதில் சொல்வதற்கு முன்பே. ஏன் தெரியுமா?

லண்டனில் உள்ள கர்டிஃப் மெட்ரோபோலிடன் பல்கலைக்கழகத்தில் மார்டின் கோமேரன் என்பவர் தலைமையில், முப்பரிமாண நகல் இயந்திரத்தைக் (3-D printer) கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அந்த சுட்டிப்பையனுக்கு கை கொடுத்திருக்கிறது, ஆம் உண்மையில் கை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சியான் மோரிஸ் பிறக்கும் போதே இடது கையில் விரல்களும், கால்வாசி பகுதியும் இல்லாமல் பிறந்திருக்கிறான். ஐந்து வயது வரை ஒரு கை இல்லாமல் கஷ்டப்பட்டவனுக்கு உதவியிருக்கிறது மார்டின் தலைமையிலான ஆய்வுக்குழு.

அந்தக் குழு, சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமான முப்பரிமாண நகல் இயந்திரத்தின் உதவியைக் கொண்டு, அந்தச் சிறுவனுக்காக ஒரு இயந்திரக் கையை உருவாக்கியிருக்கிறது. சிவப்பும், நீலமும் கலந்த வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கையைக் கொண்டு, சாதாரண கை செய்யும் எல்லாப் பணிகளையும் செய்யலாம். இந்தக் கைக்கு 'ஸ்பைடர் மேன் ஹேண்ட்' என செல்லமாக பெயரிட்டிருக்கிறார்கள் சியானின் நண்பர்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து மார்டின் கூறுகையில்,  "இனி சியான் மோரிஸ் எந்த சிரமமும்  இன்றி எல்லோரையும் போல இரண்டு கைகளையும் பயன்படுத்தலாம்,எந்த விதமான எடையையும்   தூக்கலாம், எல்லோரையும் போல எழுதலாம், படம் வரையலாம், சாப்பிடலாம் எல்லாமும் செய்யலாம்"என்றார்.

புதிய  கை மாட்டப்பட்ட சில மணி நேரத்திலேயே அதை எளிதாக பயன்படுத்தக் கற்றுக் கொண்டதாகவும்,  சில வேலைகளை செய்யும்போது மட்டும் கொஞ்சம் கஷ்டப்படுவதாகவும், சில மாதங்களில் அந்த பிரச்னையும் சரியாகிவிடும் என சியானின் தாய் ஸூ கூறுகிறார். இவன் நண்பர்களோ, அவன் கை மட்டும்தான் வித்தியாசம்; மற்றபடி அவன் எதிலும் எங்களில் இருந்து வித்தியாசப் படவில்லை"  என்கிறார்கள் தோழமையுடன். அவனோ எல்லாவற்றிற்கும் அழகான புன்னகையை மட்டும் பதிலளிக்கிறான்.

மற்ற செயற்கை உறுப்புகளைப் போல் விலை அதிகமாக  இல்லாமல், இந்திய ரூபாய் மதிப்பில் இதை 7000 ரூபாய்க்குள்  உருவாக்கிவிட முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கையின் பயன்பாட்டை உலகம் முழுவதும் கொண்டும் செல்லும் திட்டத்திலும் இருக்கிறார்கள். இந்தக் கையை மாட்டிக்கொண்டு,  "ஐ லைக் இட், இட் இஸ் ஃபன் ( I like it ,it is fun)" என அழகாக சிரிக்கிறான் சியான் மோரிஸ்.
 

"தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்" என்று
பில்கேட்ஸ் ஒரு கருத்தரங்கில் கூறினார். ஆம்... உண்மையில் நாம் உலகத்தை மாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்!

சியாம் சுந்தர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ