Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சென்னை ஏர்போர்ட்’ செயலியை அறிமுகப்படுத்தியது ஏ.ஏ.ஐ!

விமான நிலைய சேவைகள் மற்றும் தகவல்களை பயணிகள் அறிய ‘சென்னை ஏர்போர்ட்’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது ஏ.ஏ.ஐ.

இந்திய விமான நிலையங்கள் ஆணையமான ஏ.ஏ.ஐ., இச்செயலியின் மூலம் பயணிகள் விமானங்களின் இயக்கம், விமான நிலைய அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை அறிய முடியும்.



விமானங்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் , தற்போது விமானம் இருக்கும் இடத்தை ஜி.பி.ஸ். முலம் அறியும் வசதி போன்ற ஆப்ஷன்களை விரைவில் சேர்க்க உள்ளதாக விமான நிலைய அதிகாரி தீபக் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தற்போது, ஆன்டராய்டு போன்களுக்கு மட்டும் உள்ள இந்த செயலி, இன்னும் சில தினங்களில் ‘ஐ போன்’ மற்றும் ‘வின்டோஸ்’ போன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியில் உள்ள தகவல்கள் அனைத்தையுமே ஏ.ஏ.ஐ இணையதளத்தில் பெற்றுகொள்ள முடியும் என்பதால், கூடுதல் வசதிகள் இருந்தால் இதனை அதிகம் பேர் பதிவிறக்கம் செய்வர் என  கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

- நிர்மல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close