Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்றுத் திறனாளிகளுக்காக மாத்தியோசித்த கல்லூரி மாணவர்கள்!

மாற்றுத் திறனாளிகளுக்காக  இதுவரை முன்பக்கம் இயக்கத்தக்க வகையிலான மோட்டார் பைக்குகள்தான்  வழக்கத்தில் உள்ளன. ஆனால்  அத்தகைய பைக்குகளை ரிவர்சில் இயக்க, அவர்களுக்கு   பிறர்  உதவி  தேவைப்படுகிறது. இதை  மாற்றியமைக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  'இ  பைக்'

சத்தம் வராது, சுற்றுச்சூழல் பாதிக்காது, 1 கி.மீ க்கு 35 பைசா மட்டுமே  செலவாகும். 1 முறை  சார்ஜ் செய்தால்  60 கி.மீ  வரை  செல்லும் திறன்  உடையது. ஒரு  வேலை மின்சாரமின்றி 'இ  பைக்' இடையிலேயே  நின்று விட்டாலும்,  5 நிமிடம்  கழித்து  இயக்கினால் 5 கி.மீ வரை மேலும் செல்லும் திறன் கொண்டது.

இத்தகைய  பயனுள்ள ரிவர்ஸ் இ பைக்கை,  திண்டுக்கல்  மாவட்டம்  எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரி ஆட்டோ மொபைல் பேராசிரியர் ராஜவேல் மற்றும் மாணவர்கள் முகமது ஷகீல், சப்தகிரி, நவீன் குமார், சரண் பாண்டியன், அஸ்வின் பாபு, நிஷாந்த் ஆகியோர்  இணைந்து  கண்டுபிடித்துள்ளனர்.

 இதன் விலை ரூ.20,000. இதற்காக தேசிய அளவில் முதல் பரிசும் கிடைத்துள்ளதாக கல்லூரி முதல்வர் பழனிச்சாமி  கூறுகிறார்.  இதன் விலை குறைய  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரா.நிரஞ்சனா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ