Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயணிப்போம் பயன் பெறுவோம்: கம்ப்யூட்ராலஜி தொடர்- ஓர் அறிமுகம்!


அன்பார்ந்த வாசகர்களே!


கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஸ்மார்ட்போன் மூன்றும் தகவல் தொழில்நுட்பத்துடன் கைகோர்த்துக்கொண்டு இன்று வெகுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் வேளையில், இன்டர்நெட்டிலும் ‘வெர்ச்சுவல் உலகம்’ ஒன்று உருவாகியுள்ளது. 

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம்,  நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று, நேரடியாக அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பயன்படுத்துவது. மற்றொன்று,  ஆன்லைனிலேயே இருக்கின்ற இடத்தில் இருந்தே அவற்றைப் பெறுவது.

வருங்காலத்தில் மனித சேவைகள் முற்றிலும் குறைந்து, தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கும். தொழில்நுட்பத்தோடு இணைந்து நாமும் வளர்ந்து வராவிட்டால், மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே, தொழில்நுட்பத்தோடு இணைத்து உங்களை அனைவரையும் அழைத்துச் செல்வதுதான் ‘கம்ப்யூட்ராலஜி’ என்ற இந்த தொடரின் நோக்கம். தொடர்ந்து என்னோடு சேர்ந்து பயணம் செய்து பயன் அடையுங்கள்.

திங்கள், புதன், வெள்ளி என வாரத்தின் மூன்று நாட்கள் இந்த தொடர் விகடன்.காம் -ல் இடம்பெறும்.

பயணிப்போம் பயன் பெறுவோம்!

வாழ்த்துக்களுடன்...


- 'காம்கேர்' கே. புவனேஸ்வரி
 

எடிட்டர் சாய்ஸ்