Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கம்ப்யூட்ராலஜி தொடர் - ஒரு விளக்கம்!

ம்ப்யூட்ராலஜி தொடரின் முதல் வாரத்தை வெற்றிகரமாக்கி வரவேற்பு கொடுத்த விகடன் டாட் காம் வாசகர்களுக்கு மிக்க நன்றி.

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் மக்களை மூன்று விதமாகப் பிரித்துக்கொள்ளலாம்.

முதலாவது பிரிவினர், இன்டர்நெட்டினால் கிடைக்கக் கூடிய வசதிகளை மட்டும் பயன்படுத்துபவர்கள். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பக்கம் தலைவைத்துக்கூட பார்த்திருக்காதவர்கள்.

உதாரணத்துக்கு மெடிக்கல் ஷாப், மளிகைக் கடை போன்றவற்றில் அவர்கள் கொடுக்கின்ற கம்ப்யூட்டர் பில்களை மட்டும் பெற்றுக்கொள்வார்கள். தானாக எதையும் செய்யத் தெரியாது.

இரண்டாவது பிரிவினர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அவ்வளவாகத் தெரியாது. உதாரணத்துக்கு, சினிமா டிக்கெட் எடுக்க ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வார்கள். ஆன்லைனில் விகடன் டாட் காமில் விகடன் இதழ்கள் அத்தனையும் படிப்பார்கள். ஏன் இ-புத்தகத்தைக் கூட வாசிப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் உள்ள புரோகிராமிங்கோ அல்லது மற்ற தொழில்நுட்ப ரீதியான விவரங்களிலோ அத்தனைப் புலமை இருக்காது.

மூன்றாவது பிரிவினர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் செய்வார்கள், அவர்களின் அடிப்படை பணியும் அதிலேயே இருக்கும். புரோகிராமர்கள், கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட்டுகள், அனிமேட்டர்கள் இப்படிப்பட்ட வல்லுநர்களை இந்தப் பிரிவில் அடக்கலாம்.
தொழில்நுட்பத்திலேயே பணிபுரிகின்ற மூன்றாவது பிரிவினருக்கு இத்தொடரின் மூலம் சொல்லப்படும் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ‘இதுதானே அடிப்படை. இதைப்போய் இத்தொடரில் சொல்லி இருக்கிறார்களே’ என்ற எண்ணம் தோன்றலாம்.

கம்ப்யூட்ராலஜி தொடரின் மூலம் இரண்டாவது பிரிவினரை மூன்றாவது நிலைக்கு உயர்த்துவதுதான் இத்தொடரின் நோக்கம். முடிந்தால் முதல் பிரிவினரையும் இரண்டாவது நிலைக்குக் கொண்டு வர முடியும். மேலும் இந்தத் தொடரின் நோக்கம் அன்றாட தொழிநுட்பச் செய்திகளை கொடுப்பது அல்ல. தொழில்நுட்ப ரீதியாக பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயங்களில் தெரியாத விவரங்களை எடுத்துச் சொல்வதே.

கம்ப்யூட்ராலஜி தொடரை இன்னும் மெருகேற்றி, அனைவரையும் தொழில்நுட்பத்தில் இணைக்க எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு, வழக்கம்போல உங்கள் அனைவரின் நல் ஆதரவை எதிர்நோக்கும்...

- காம்கேர் கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ