Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஸ்டாகிராமின் இன்ஸ்டன்ட் ஆப்கள்..! (வீடியோ)

ர்க்குட், பிளாக்ஸ் என நாம் பழங்கதைகள் பேசிய சமூக வலைத்தளங்களை எல்லாம் இன்ஸ்டன்ட் செல்ஃபி, க்ரூப்பி, நச்சுனு 140 எழுத்துகளில் செய்தி என ட்ரெண்டிங் வைப்ரேஷனில் மாற்றியது ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம். ஆனால், இப்போது அதுவும் பழையதாகி விட்டது. சமீபத்தில் அந்த வைரல் மீட்டரை அப்படியே சூடு குறையாமல் பார்த்துக் கொண்டது டப்ஸ்மாஷ் அப்ளிகேஷன்.

இனி அடுத்து எல்லாம் GIF ஷேரிங்க்தான். சமூக வலைத்தளங்களின் புகைப்படங்களில் இன்னும் நம்பர் 1 இன்ஸ்டாகிராம்தான். ஹாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களின் டாப்லெஸ்களாலேயே டாப்புக்கு வந்த இணையதளம். இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கும் புது ஆப் தான் பூமராங் (boomerang).

வீடியோக்கள்தான் இனிமேல் ஹிட் ஆகும் என ஏற்கனவே ட்விட்டர்,  6 நொடி வீடியோ எடுத்து பகிர வைன் (VINE) என்னும் செயலியை, இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியது. ஆனால், மெச்சும் படி பேர் வாங்கவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் மாதம் 400 மில்லியன் பயனாளர்களுடன் முன்னணியில் இருக்கிறது. அதோடு ஃபேஸ்புக்,  சமீபத்தில் GIF இமேஜ் ஃபார்மட்டை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அதன் பின்பு GIF வகை புகைப்படங்கள் ஹிட் வைரலாக, அதற்கென பல மென்பொருள்கள் வந்துவிட்டன.

அதிக வரவேற்பை தொடர்ந்து அந்த சந்தையை பிடித்திருக்கிறது இன்ஸ்டாகிராம். பூமராங் மூலம் இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லாதவர்களும் பயன்படுத்தி, அதை மற்ற சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யலாம். எந்த தருணத்தை புகைப்படம் எடுக்க வேண்டுமோ, அப்போது கேப்ச்சர் பட்டனை அழுத்தி சில நொடிகள் பிடித்தால்போதும். அதற்குள் 10 போட்டோக்களை எடுத்து தானாகவே பதிவாகி (save) விடும். பின்னர்  எடுத்த போட்டோக்களை செயலி ஒருங்கிணைத்து, முன்னும் பின்னுமாக வீடியோ போல காட்டும். இதன் செயல் வடிவம் குறித்த வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.


போட்டோக்களை ஒருங்கிணைக்கும்  அல்லது கொலாஜ் (collage) செய்யும் LAYOUT என்னும் செயலியையும் ஏற்கனவே வெளியிட்டிருந்தது இன்ஸ்டாகிராம். இந்த இன்ஸ்டன்ட் ஆப்கள் மூலம் நம்பர் 1 இடத்தின் ஆயுளை நீட்டித்துக் கொண்டுள்ளது இன்ஸ்டாகிராம்.

நிறுவனங்களின் வணிக விவரங்களை ஆய்வு செய்து வரும் இ-மார்க்கெட்டர் இணையதளம், இன்ஸ்டாகிராமின் அடுத்த ஆண்டு விளம்பர வருவாய் 1.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும், 2017ல் 2.8 பில்லியன் டாலர்கள் ஆகும் என்றும் கணித்துள்ளது. இந்த வருடம் இன்ஸ்டாகிராமின் விளம்பர வருவாய் 600 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் நம்ம உழைப்புதான்...!

-ஞா.சுதாகர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ