Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்வைப் டெக்னாலஜிஸ் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட்போன் ஸ்வைப் எலைட் 2

ட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் போன இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ஸ்வைப் டெக்னாலஜிஸ் நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்வைப் டெக்னாலஜிஸ் வெளியிட்டிருக்கும் புதிய 4 ஜி ஸ்மார்ட்போன்,  சந்தையில் ரூ.4,666க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சங்கள்  இங்கே...

* ஸ்வைப் எலைட் 2 தற்சமயம் இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 4G ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது.

* முன்னதாக லெனோவோ நிறுவனத்தின் A2010 மாடல் 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,990 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

* ஸ்வைப் எலைட் 2 ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே க்யூஎச்டி ரெசல்யூஷனும் வழங்கப்பட்டுள்ளது.

* 1.3 Ghz  குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

* மெமரியை பொருத்தவரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

* கேமராவை பொறுத்தவரை 8 எம்பி ஆட்டோஃபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

* 1900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்வைப் எலைட் 2 ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

* 4ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வை-பை 802.11 b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி 2.0 மற்றும் ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

* டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஸ்வைப் எலைட் 2 ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  - மு.ஜெயராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ