Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாசகர்களுக்கு நன்றி! ( கம்ப்யூட்ராலஜி: தொடர் நிறைவுப்பகுதி)


அன்பார்ந்த வாசகர்களே!

கம்ப்யூட்ராலஜி  தொடர் மூலம்  ‘விகடன் டாட் காம்’ வாசகர்களாகிய உங்கள் அனைவரையும் சந்தித்து தொழில்நுட்ப தகவல்களை  பகிர்ந்து கொண்டது வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றுத் தந்தது.
 
இந்தத் தொடரில் நான் எழுதி வந்த ஒவ்வொரு தகவலும், எங்கள் சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் சாஃப்ட்வேர், அனிமேஷன், குறும்படங்கள் போன்றவற்றை நாங்கள் தயாரிக்கும்போது எனக்குக் கிடைத்த நேரடி அனுபவங்கள். எதுவும் மொழிபெயர்ப்போ அல்லது இன்டர்நெட்டில் தேடி எடுக்கின்ற தகவல்களோ அல்ல.

குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு உதவக்கூடிய ‘குரல் எழுத்துக்கள்’, புகைப்படத்தில் பாஸ்வேர்டை ஒளித்து அனுப்புகின்ற  ‘ஸ்டெகனோகிராஃபி’, இன்டர்நெட்டில் விண்ணப்பங்களை பதிவு செய்த பிறகு நாம் மனிதன்தானா என உறுதி செய்துகொள்ளும் ‘கேப்ட்சா’, இந்தியாவில்  உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவில் வாழும் நம் நண்பர்களின் கம்ப்யூட்டரை ஆப்பரேட் செய்ய உதவும் ‘ரிமோட் கன்ட்ரோலில் கம்ப்யூட்டர்கள்’,  ‘கட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF’, ‘மானிட்டரை செல்ஃபி எடுக்க வைக்க உதவும் தொழில்நுட்பம்’, ‘பவர்பாயின்ட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர்’ என அத்தனையும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள்.
 
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மக்களை மூன்றுவிதமாகப் பிரித்துக்கொள்ளலாம். முதலாவது பிரிவினர், இன்டர்நெட்டினால் கிடைக்கக் கூடிய வசதிகளை மட்டும் பயன்படுத்துபவர்கள். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பக்கம் தலைவைத்துக்கூட பார்த்திருக்காதவர்கள். உதாரணத்துக்கு மெடிகல் ஷாப், மளிகைக் கடை போன்றவற்றில் அவர்கள் கொடுக்கின்ற கம்ப்யூட்டர் பில்களை மட்டும் பெற்றுக்கொள்வார்கள். தானாக எதையும் செய்யத் தெரியாது.

இரண்டாவது பிரிவினர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அவ்வளவாகத் தெரியாது. உதாரணத்துக்கு, சினிமா டிக்கெட் எடுக்க ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வார்கள். ஆன்லைனில் விகடன் டாட் காமில் விகடன் இதழ்கள் அத்தனையையும் படிப்பார்கள். ஏன் இ-புத்தகத்தைக் கூட வாசிப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் உள்ள புரோகிராமிங்கோ அல்லது மற்ற தொழில்நுட்ப ரீதியான விவரங்களிலோ அத்தனைப் புலமை இருக்காது.

மூன்றாவது பிரிவினர், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் செய்வார்கள், அவர்களின் அடிப்படை பணியும் அதிலேயே இருக்கும். புரோகிராமர்கள், கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட்டுகள், அனிமேட்டர்கள் இப்படிப்பட்ட வல்லுநர்களை இந்தப் பிரிவில் அடக்கலாம்.

தொழில்நுட்பத்திலேயே பணிபுரிகின்ற மூன்றாவது பிரிவினருக்கு  இத்தொடரின் மூலம் சொல்லப்பட்ட சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஏன் எல்லா தகவல்களுமே தெரிந்திருக்கலாம். ‘இது தெரிந்த தகவல்தானே,  இதைப்போய் இத்தொடரில் சொல்லி இருக்கிறார்களே’ என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம்.

கம்ப்யூட்ராலஜி தொடரின் மூலம் இரண்டாவது பிரிவினரை மூன்றாவது நிலைக்கு உயர்த்துவதுதான் எனது நோக்கமாக இருந்தது. முதல் பிரிவினரையும் இரண்டாவது நிலைக்குக் கொண்டு வர முயற்சித்தோம். இந்தத் துறையில் 23 வருடங்களுக்கு மேலாக அனுபவம் பெற்றிருந்தாலும், 85-க்கும் மேலாக சாஃப்ட்வேர் துறை சார்ந்த நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி இருந்தாலும், வாசகர்களுடன் நேரடியாக ஆன்லைனில் தொடர்புகொள்ளும்போது, தகவல்களை எப்படிக் கொடுக்க வேண்டும் என்ற நுட்பத்தை இந்தத் தொடர் எழுதும்போது தெரிந்துகொண்டேன்.

கம்ப்யூட்ராலஜி தொடருக்கு இதுவரை ஆதரவளித்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

- காம்கேர்
கே. புவனேஸ்வரி


Disclaimer


கம்ப்யூட்ராலஜி தொடரில் இதுவரை வெளிவந்துள்ள எல்லா கட்டுரைகளும், அந்தந்த கட்டுரையில் பயன்படுத்தியுள்ள சாஃப்ட்வேரின் தயாரிப்பாளர்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே தயாரிக்கப் பட்டுள்ளது.  வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், வடிவமைப்பிலும், கட்டணத்திலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

அதற்கு கட்டுரை ஆசிரியரோ, விகடன் டாட் காமோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

 


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close