Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க ஜிபிஎஸ்-க்கு குட்பை சொல்லும் இஸ்ரோ!

ற்போது மொபைல் போன், டேப்லட் போன்ற கேட்ஜெட்ஸ் மற்றும்  கார், கப்பல் உட்பட எல்லாவற்றிலும் வழிகாட்டியாக, தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது ஜி.பி.எஸ் என்னும் Global Positioning System சேவை.

1973 முதல் அமெரிக்காவில் இந்த ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கினர். செயற்கைகோள் உதவியுடன், பூமியைக் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம் முதலில் ராணுவம், கப்பற்படை போன்ற தேச பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. 90-களில் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றியது அமெரிக்கா. நம் இந்தியாவில் பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் தொழில்நுட்பமே.

அதை மாற்றும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, IRNSS எனும் Indian Regional Navigation Satelite System என்னும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் ஜி.பி.எஸ் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மொபைல் போன் தயாரிப்பாளர்கள், உலக தகவல் அமைப்பின் (GIS) உறுப்பினர்கள் என அனைவரையும் அழைத்து, இரண்டு நாட்களுக்கு இந்த IRNSS தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் காட்டியிருக்கிறது இஸ்ரோ. மொத்தம் ஏழு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இந்த இந்திய தொழில்நுட்பத்திற்காக இதுவரை 4 செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதி மூன்று செயற்கைக்கோள்களும் விரைவில் அனுப்பப்பட்டு,  அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்கிறது இஸ்ரோ.

இந்தியாவுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இதில் ஜி.பி.எஸ்-ஐ விட துல்லியமான தகவல்கள் பெறமுடியும். IRNSS தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம், சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைகிறது.

IRNSS-ன் மேலும் சில சிறப்பம்சங்கள் வருமாறு...

1. இந்த தொழில்நுட்பத்தை ஜி.பி.எஸ்-க்கு மாற்றாக கார், கப்பல்கள், மொபைல் போன்கள் என எல்லா இடத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

2. இது போன்ற சொந்த நேவிகேஷன் அமைப்பைப் பயன்படுத்தும் நாடுகள், அமெரிக்கா (GPS-24 செயற்கைகோள்கள்),  ரஷ்யா (Glonass of Russia- 24 செயற்கைகோள்கள் ), ஐரோப்பா (galelio of Europe- 27 செயற்கைகோள்கள்), சீனா (சீனா பெய்டோ- 35 செயற்கைகோள்கள்).

3. நான்கு செயற்கைகோள்கள் IRNSS-1A, IRNSS-1B, IRNSS-1C, IRNSS-1D ஆகியவை ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

4. இரண்டு  செயற்கைகோள்கள் இந்த ஆண்டிற்குள் ஏவப்படும். மற்ற ஒன்று அடுத்த ஆண்டு அனுப்பப்படும்.

- ஞா. சுதாகர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ