Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!!

உலக சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்தியா. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பரிவர்த்தனை 23.3 சதவீதமாக உயர்ந்து 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன்  ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டு மட்டும் சுமார் 81.1 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கபட்டதாக கவுன்டர்பாயின்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது இந்தியாவில் சுமார் 220 மில்லியன் ஸ்மாரட்போன் பயனாளர்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது மொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைவாக இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மூத்த ஆய்வாளர் தருன் பதாக் கூறியுள்ளார். 4ஜி LTE ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிப்பதால் ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி அக்டோபர் முதல் டிசம்பர் 2015ம் காலாண்டில் சுமார் 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 



2015ம் ஆண்டின் நான்காம் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்தது எனினும் நவம்பர் மாத மத்தியில் ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி குறைந்ததாக கவுன்டர்பாயின்ட் ஆய்வாளர் பவல் நையா தெரிவித்தார். இதே காலக்கட்டத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பாதி ஸ்மார்ட்போன்கள் LTE அம்சம் கொண்டிருந்ததால் LTE கருவிகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்திருப்பதாக நையா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 3ஜி சேவை பயன்பாட்டின் உயர்வை ஒப்பீடு செய்யும் போது 4ஜி சேவை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக கவுன்டர்பாயின்ட் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 40 சதவீதம் மொபைல் போன்கள் ஸ்மார்ட்போன் கருவிகள் என்பதோடு இவைகளில் பாதி கருவிகள் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2015ம் ஆண்டின் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் சந்தையில் 28.6 சதவீத பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்திருந்தது. இதனை தொடர்ந்து 14.3% பங்குகளுடன் மைக்ரோமேக்ஸ், 11.4% பங்குகளுடன் லெனோவோ நிறுவனமும், 9.6% பங்குகளுடன் இன்டெக்ஸ் நிறுவனமும், 6.8% பங்குகளுடன் லாவா நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.

இதுவே ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன்களை வைத்து பார்க்கும் போது மொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கின்றது. இதனை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், லாவா மற்றும் லெனோவோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.

இந்தியாவிலேயே தயாரித்து ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தால் நமது பொருளாதாரம் உயரும். ஆனால் தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்கள் தான் அதிகம் விற்பனை ஆகின்றன.


- மு.ஜெயராஜ்
மாணவர் பத்திரிகையாளர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close