Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்?

கவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது  இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள்,  மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன.

இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப்,  ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதுவும் சமீபத்தில் ஐ-ஓ.எஸ்சில் ஏற்படுத்தப்பட்ட அப்டேட்கள் இதன் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளன.வீடியோ ஓடையில் ஜூம் செய்வது, அதிக பேக் கிரவுண்ட் ஆப்ஷன்கள் மற்றும் பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்பும் வசதி என நிறைய அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. கூகுள் டாக்குமென்ட், ஐ கிளவுட் மற்றும் டிராப் பாக்ஸ் போன்ற ஆப்களின் உதவியோடு பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பைல்களை அனுப்பவே ஜி-மெயில் போன்ற இன்டெர்நெட் மெயில் சர்வீஸ்கள் உபயோகப்பட்டுவந்த நிலையில்,  வாட்ஸ்-அப்பிலேயே இந்த வசதி வந்திருப்பது, நமது தொடர்பு முறையை மேலும் எளிதாக்கிவிடும்.

 இனிமேல் லாக்-இன் செய்து மெயில் கம்போஸ் செய்யத் தேவையில்லை. வழக்கமாக நாம் எந்நேரமும் சேட் செய்து கொண்டிருக்கும் வாட்ஸ்-அப்பிலேயே அனைத்தையும் முடித்துவிடலாம். குரூப் மெயில் அனுப்ப நினைத்தால்,குரூப் சேட்டில் அந்த மெசேஜை அனுப்பிவிடலாம். அதுமட்டுமின்றி மிகப்பெரிய பைல்களை ஐ-கிளவுடில் சேவ் செய்துகொள்ளவும் முடியும் என்பதால், டேடா ரிசீவிங்கும் இதில் எளிதே. குறைந்த நேரத்தில் எளிதில் அனுப்ப முடியும் என்பதால், இதை அனைவரும் விரும்புவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லேப் டாப்களிலும் வாட்ஸ்-அப் வலம் வருவதால் மொபைல் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும் இதன் பயன்பாடு எளிதே.

ஃபேஸ்புக் வந்த பிறகு ஆர்குட், ஜி-மெயிலின் வருகைக்குப் பிறகு ஹாட் மெயில் போன்றவையெல்லாம் காணாமல் போன வரலாறு நாம் அறிந்ததே. எந்த வேலையையுமே மனிதன் எளிதாக செய்ய நினைப்பதால் தான் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகிறது. தந்தி சேவைக்கு இந்தியாவில் மூடுவிழா கண்டதுபோல வாட்ஸ்- அப்பின் இந்த முன்னேற்றங்களால் ஜி-மெயில் போன்ற இ-மெயில் தளங்களுக்கும் மூடுவிழா காணும் நாள் விரைவில் வந்துவிடும் என்று கணிக்கின்றனர் வல்லுநர்கள்.

கூகுளின் சி.இ.ஓ வான நம்ம ஊரு சுந்தர் பிச்சை இதை எப்படி டீல் பண்ணப் போறாரோ?

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ