Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் பத்தாயிரம்: என்ன மொபைல் வாங்கலாம்?

பேங்க்ல் இருந்து பள்ளி மாணவர்கள் வரைக்கும் எல்லாத்தையும் புதுசா மாத்துற சீசன் இது. மொபைலையும் மாத்தலாம் யோசிக்கிறவங்களா? மொபைலுக்கு உங்க அதிகபட்ச பட்ஜெட் 10,000லிருந்து-12,000 என்றால் இவை தான் பெஸ்ட் மொபைல்ஸ்.

1) ஆஸஸ் ஜென்ஃபோன் 2 லேஸர் (Asus Zenfone2 Laser)

ஆன்லைனில் 9,000 ருபாய்க்கு கிடைக்கும் மாடல்களில் , நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் இருக்கும் ஒரு மொபைல் என்றால் அது ஜென்ஃபோன் 2 லேஸர் தான். 5.5" ஸ்கிரீன்,3000 mAh பேட்டரி, 16 ஜிபி இன்பில்ட் மெமரி, கடினமான கொரில்லா திரை, 13 மெகாபிக்ஸல் கேமரா என அசத்தல் வெர்ஷன் இந்த மொபைல். ஒரு நாள் தாராளமாய் தாங்கும் இதன் பேட்டரி தான் மொபைலின் பிளஸ். ஜென்ஃபோன்களுக்கே உரித்தான மோசமான ஃப்ரன்ட் கேமரா இந்த மொபைலின் ஒரே மைனஸ். செல்ஃபி பிரியர்கள் அதை மட்டும் யோசிக்கணும்.

2) லீ ஈகோ லீ 1S (Le eco le -1s)

ஆப்பிள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டது என அதிரடியாக அறிவிப்பு செய்தார், லீ ஈகோவின் உரிமையாளர். 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்பில்ட் மெமரி, (மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை), மெட்டல் பாடி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 5.5" ஸ்கிரீன், மீடியாடெக் ஆக்டோ கோர் ப்ராசஸர், வேகமாக சார்ஜ் செய்யும் வசதி என அள்ளுகிறது 1S மொபைல். 3000 mAh பேட்டரி என குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இதன் பேட்டரி திறன் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது தான் இதன் மைனஸ். ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்கப்படும் இந்த மொபைல் (11,000 ரூபாய்), வாடிக்கையாளர்களிடம் 3.7/5 ரேட்டிங் பெற்று இருக்கிறது.

3) ஷியோமி Mi4I (Xiomi Mi4i)

இந்திய மொபைல் சந்தையில், மைக்ரோமாக்ஸிற்குப் பின், ஒரு அதிர்வை ஏற்படுத்தியது ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி மொபைல்கள் தான் . Mi4Iயும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்பில்ட் மெமரி, 3120 mAh, 13 மெகாபிக்ஸல் கேமரா, 1.7 GhZ 64-bit ஆக்டோ கோர் ப்ராசஸர் என நட்சத்திர வேட்பாளர் போல் கலக்குகிறது  Mi4i.

4) லெனோவோ K4 நோட் (Lenova K4 Note)

கடந்த ஆண்டு வெளியான K3 நோட்டின் அடுத்த வெர்ஷன் தான் K4 நோட். அமேசான் தளத்தில் மட்டுமே விற்கப்படும் இந்த மொபைலை இரண்டு மாதங்களில் வாங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.5.5" ஸ்கீரின், 64-பிட் ஆக்டோகோர் பிராசஸர், 13 மெகாபிக்ஸல் கேமரா,3 ஜிபி ராம், 3300 mAh பேட்டரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் என எல்லா பாலிலும் சிக்ஸர் அடிக்கிறது. ஆனால், லெனோவாவின் இந்த மொபைலும் 'நெருப்புடா' மோடில் தான் கொதிக்கிறது. லெனோவாவின் சூட்டிற்கு நீங்கள் பழக்கப்பட்ட்வர் என்றால், 12,000 ரூபாய்க்கு தாராளமாய் இந்த மொபைல் வாங்கலாம்

5) மோட்டோ ஜி டர்போ (Moto G Turbo)

ஃபிளிப்கார்ட்டில் இந்த மொபைல் முதலில் விற்க ஆரம்பித்த போது தட்கலை விட மோசமான நிலையில் இருந்தது. மோட்டோ ஜியை புக் செய்து விட்டு, பேமென்ட் ஆப்சனுக்கு போனால், விற்றுத் தீர்ந்துவிட்டது என வரும். அடுத்து  விற்பனை என்று என தேவுடு காத்துக்கொண்டு இருப்போம். அப்படித்தான் ஆரம்பித்தது மோட்டோஜியின் யுகம். மோட்டோ ஜி2, ஜி3, தற்போது ஜி டர்போ. 13 மெகாபிக்ஸல் கேமரா, தண்ணீரிலும் ஒன்றும் ஆகாது,டூயல் சிம் என பல விஷயங்களில் மோட்டோ ஜி டர்போ கில்லி. மோட்டோ ஜியும் லெனோவோ நிறுவனத்தின் மொபைல் என்றாலும், மோட்டோக்கள் 'நெருப்புடா' பிரச்சனையில் சிக்குவதில்லை. தண்ணீரைப்பற்றி பயம் இல்லாதவர்கள் மோட்டோஜிக்கு போகவும் (9,900). தண்ணீரிலேயே இருப்பவர்கள் மோட்டோ ஜி டர்போ பக்கம் (12,499) பக்கம் ஒதுங்கிக்கொள்ளவும் .

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close