Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொளுத்தும் வெயிலுக்கு 'குளுகுளு' கேட்ஜெட்ஸ்!

ள்ளிக்குழந்தைகளுக்கு விட்ட மாதிரி சம்மருக்கு லீவ் விட்டுட்டா என்ன என பெரியவர்களையும் யோசிக்க வைக்கும் அளவிற்கு அக்னி நடசத்திரம் தொடங்கும் முன்னரே அனலை கக்குகிறது வெயில். அந்த கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் கேட்ஜெட்களை அடுக்கி வைக்கிறது டெக் சமூகம். 
 
USB Fan:
ஆறாம் விரலாய் பேனா இருந்த காலம் போய் இப்போது மூன்றாம் கையாய் ஸ்மார்ட்போன் தவழ்கிறது எல்லாரிடமும். இனி நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் வழியாகவே காத்து வாங்கலாம். Skyleo USB fan-ஐ வாங்கி உங்கள் மொபைலில் மாட்டிக்கொண்டால் போதும். ஜில் காற்று முகத்தை கொஞ்சும். அமேசானில் இதன் விலை வெறும் 300 ரூபாய்தான். ஜெயலலிதாவே பிரசாரத்தின் போது கையடக்க ஃபேனைதான் பயன்படுத்துகிறார் என்பது கூடுதல் தகவல்.
 
Fan cap:
சுட்டெரிக்கும் வெயிலில் மண்டை காய்பவர்களுக்கான சாதனம் இது. Solar powered Fan cap. பெயரை பார்த்தாலே தெரிந்திருக்குமே. பல்வேறு அளவுகளில் கிடைக்கும் இந்த தொப்பியில் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய ஃபேன் பொருத்தப்பட்டிருக்கும். தலையில் மாட்டிக்கொண்டு 'ஃபேன் என்ன சுத்துதே...' என ஜாலியாய் ஊர் சுற்ற வேண்டியதுதான். விலை ஐநூறுக்குள்தான். 
 
Mini PC USB Refrigerator:
அட நம்புங்க ஜி! நிஜமாவே ஃப்ரிட்ஜ்தான். இந்த கையடக்க  ஃப்ரிட்ஜில் நீங்கள் சின்ன தண்ணீர் பாட்டிலையோ குளிர்பான கேனையோ வைத்துக்கொள்ளாலாம். உங்கள் மொபைலோடு கனெக்ட் செய்துவிட்டால் ஜில்லென அவ்வப்போது திறந்து குடித்துவிட்டு ஜம்மென வேலை பார்க்கலாம். விலை ஆயிரத்துச் சொச்சம்.
 
Stainless Steel Ice Cubes:
அடிக்கும் வெயிலுக்கு பாவம் ஃப்ரீஸரே கன்ஃப்யூஸ் ஆகிறது. அடிக்கடி பவர் கட் வேறு. இந்த நிலையில் எங்கே போய் ஐஸ்கட்டியை தேட? அதற்குதான் இந்த ஐஸ் க்யூப்ஸ். இதை நீங்கள் கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் போதும். அடுத்து எப்போது வேண்டுமானாலும் எடுத்து க்ளாசில் போட்டு தண்ணீரோ சோமபானமோ குடித்துக் கொள்ளலாம். உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்ற கேப்ஷனோடு வருகிறது. விலை 2,300 ரூபாய்.
 
Thermo Withings:
இந்த வரிசையில் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு இதுதான். இந்தக் கருவி உங்களை சுற்றி இருக்கும் தட்பவெப்ப நிலை, உங்கள் உடலின் தட்பவெப்பநிலை ஆகியவற்றை மானிட்டர் செய்துகொண்டே இருக்கும். வஃபை உதவியோடு அவற்றை தொடர்ந்து ட்ராக் செய்துகொண்டே இருக்கும்.
 
Portable humidifier:
 
அனல் காற்றால் அவதிப்படுபவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவி இது. இதில் நீரை நிரப்பி பவர் சப்ளை கொடுத்துவிட்டால், அவ்வப்போது குளிர்ந்த காற்றை வெளியேற்றி மதிய நேர தூக்கத்தை உறுதி செய்யும்.
 
- நித்திஷ்


எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ