Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஃபோன் 7ல் இதெல்லாம் இருந்தால் ஐமகிழ்ச்சி - #iMagizhchiடந்த 48 மணி நேரத்தில் தமிழர்கள் அதிகம் உச்சரித்த வார்த்தை “மகிழ்ச்சி”யாகத்தான் இருக்கும். கபாலி டீசர் தந்த மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் திளைத்திருக்கிறார்கள்.அது போல ஆப்பிள் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைக்க, ஐபோன் 7ல் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்?

1)  "மத்தத எல்லாம் கூட அப்புறமா தரட்டும். 24 மணி நேரம் நிக்குற பேட்டரியை முதல்ல கொடுக்கட்டும்’ என்கிறார்கள் ஆப்பிள் பாய்ஸ். ஒவ்வொருமுறையும் “சிறந்த பேட்டரி லைஃப்’ என சொல்லப்பட்டாலும், 6-8 மணி நேரங்கள் மட்டுமே சார்ஜ் நிற்கிறது. சீசனுக்கு சீசன் விலையேற்றுவதை நிறுத்தி, பேட்டரி பேக்கப்பை ஏற்ற வேண்டும். அதுவே ஐமகிழ்ச்சி ஆகும்.

2) நீச்சல் குளத்தில் மூழ்கி எழுந்தாலும் கோலியை போல நின்று விளையாடுகிறது சோனி எக்ஸ்பீரியா.சேம்சங் S7 ஐந்தடி ஆழத்தில் அரை மணி நேரம் இருக்கலாம் என்கிறது சேம்சங். ஆனால் ஆப்பிள் மட்டும் “எனக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கும்ப்பா’ என தண்ணீரை விட்டு ஒதுங்கியே நிற்கிறது. வாட்டர்ப்ரூஃப் ஆப்பிள் வந்தால் எங்களுக்கு தெறி மகிழ்ச்சி என்கிறது ஆப்பிள் ரசிகப்படை.

3) வயர்லெஸ் சார்ஜிங் சந்தைக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் மேட்டில் வைத்து ஆப்பிள் போனை சார்ஜ் செய்ய முடியாது. ”நம் குடும்பம்.. நம் ஆப்பிள்” என்ற கொள்கையில் ஆப்பிள் தீவிரமாக இருப்பதால் வயர்லெஸ் டெக்னாலஜியை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஆப்பிள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் டபிள் மகிழ்ச்சி என்கிறார்கள்  ஆப்பிள் யூசர்ஸ்.

4) "ட்யூவல் சிம் ஆடம்பரம்..ஆனால் மெமரி கார்டு அத்தியாவசியம்” என்ற குரல் இணையம் எங்கும் ஒலிக்கிறது. ஆனால், மெமரியை வைத்துதான் விலையை தாறுமாறாக விற்கிறது ஆப்பிள். அதனால் மெமரி கார்டு ஆப்ஷன் தர வாய்ப்பே இல்லை என்கிறார்கள் டெக் குருக்கள். “காச வாங்கிக்கட்டும். ஆனா ஆப்ஷன கொடுக்கட்டும்’ என்கிறார்கள் யூசர்ஸ். இவர்களை ஆப்பிள் மகிழ்ச்சிப்படுத்துமா?

5) "ஐபோனை ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ மாத்தணும்னா கூட ஓகே. ஆறு மாசத்துக்கு ஒரு தடவ சார்ஜரை மாத்தணுமா?” என்பது ஐபோன் யூஸர்களின் நீண்டகால அவலக்குரல். ரயில்வே ஸ்டேஷன் குடிதண்ணீர் ஏரியாவில், கைக்கு எட்டாத சங்கிலியை விட ஐபோன் சார்ஜர் சின்னதாக இருப்பதாக புலம்புகிறார்கள். போதாக்குறைக்கு கேபிளின் முனை நைந்து போய்விடுகிறது. தும்பிக்கை ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், அறுந்துவிடாது என்ற நம்பிக்கை தரும் அளவிற்காவது உறுதியான சார்ஜர் தரும் மகிழ்ச்சி எல்லையற்றது.

மகிழ்ச்சி தருமா ஆப்பிள்?

-கார்க்கி பவா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ