Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஃபோன் 7ல் இதெல்லாம் இருந்தால் ஐமகிழ்ச்சி - #iMagizhchi



டந்த 48 மணி நேரத்தில் தமிழர்கள் அதிகம் உச்சரித்த வார்த்தை “மகிழ்ச்சி”யாகத்தான் இருக்கும். கபாலி டீசர் தந்த மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் திளைத்திருக்கிறார்கள்.அது போல ஆப்பிள் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைக்க, ஐபோன் 7ல் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்?

1)  "மத்தத எல்லாம் கூட அப்புறமா தரட்டும். 24 மணி நேரம் நிக்குற பேட்டரியை முதல்ல கொடுக்கட்டும்’ என்கிறார்கள் ஆப்பிள் பாய்ஸ். ஒவ்வொருமுறையும் “சிறந்த பேட்டரி லைஃப்’ என சொல்லப்பட்டாலும், 6-8 மணி நேரங்கள் மட்டுமே சார்ஜ் நிற்கிறது. சீசனுக்கு சீசன் விலையேற்றுவதை நிறுத்தி, பேட்டரி பேக்கப்பை ஏற்ற வேண்டும். அதுவே ஐமகிழ்ச்சி ஆகும்.

2) நீச்சல் குளத்தில் மூழ்கி எழுந்தாலும் கோலியை போல நின்று விளையாடுகிறது சோனி எக்ஸ்பீரியா.சேம்சங் S7 ஐந்தடி ஆழத்தில் அரை மணி நேரம் இருக்கலாம் என்கிறது சேம்சங். ஆனால் ஆப்பிள் மட்டும் “எனக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கும்ப்பா’ என தண்ணீரை விட்டு ஒதுங்கியே நிற்கிறது. வாட்டர்ப்ரூஃப் ஆப்பிள் வந்தால் எங்களுக்கு தெறி மகிழ்ச்சி என்கிறது ஆப்பிள் ரசிகப்படை.

3) வயர்லெஸ் சார்ஜிங் சந்தைக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் மேட்டில் வைத்து ஆப்பிள் போனை சார்ஜ் செய்ய முடியாது. ”நம் குடும்பம்.. நம் ஆப்பிள்” என்ற கொள்கையில் ஆப்பிள் தீவிரமாக இருப்பதால் வயர்லெஸ் டெக்னாலஜியை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஆப்பிள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் டபிள் மகிழ்ச்சி என்கிறார்கள்  ஆப்பிள் யூசர்ஸ்.

4) "ட்யூவல் சிம் ஆடம்பரம்..ஆனால் மெமரி கார்டு அத்தியாவசியம்” என்ற குரல் இணையம் எங்கும் ஒலிக்கிறது. ஆனால், மெமரியை வைத்துதான் விலையை தாறுமாறாக விற்கிறது ஆப்பிள். அதனால் மெமரி கார்டு ஆப்ஷன் தர வாய்ப்பே இல்லை என்கிறார்கள் டெக் குருக்கள். “காச வாங்கிக்கட்டும். ஆனா ஆப்ஷன கொடுக்கட்டும்’ என்கிறார்கள் யூசர்ஸ். இவர்களை ஆப்பிள் மகிழ்ச்சிப்படுத்துமா?

5) "ஐபோனை ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ மாத்தணும்னா கூட ஓகே. ஆறு மாசத்துக்கு ஒரு தடவ சார்ஜரை மாத்தணுமா?” என்பது ஐபோன் யூஸர்களின் நீண்டகால அவலக்குரல். ரயில்வே ஸ்டேஷன் குடிதண்ணீர் ஏரியாவில், கைக்கு எட்டாத சங்கிலியை விட ஐபோன் சார்ஜர் சின்னதாக இருப்பதாக புலம்புகிறார்கள். போதாக்குறைக்கு கேபிளின் முனை நைந்து போய்விடுகிறது. தும்பிக்கை ரேஞ்சுக்கு இல்லையென்றாலும், அறுந்துவிடாது என்ற நம்பிக்கை தரும் அளவிற்காவது உறுதியான சார்ஜர் தரும் மகிழ்ச்சி எல்லையற்றது.

மகிழ்ச்சி தருமா ஆப்பிள்?

-கார்க்கி பவா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close