Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொபைல் டேட்டாவை ’பத்திரமா’ பாத்துக்கோங்க

த்து ஜி.பிக்கு டேட்டா கார்ட் போட்டாலும் போட்டோ, வீடியோ என நாம் மேயும் வேகத்திற்கு ’வாம்மா மின்னல்’ ஸ்டைலில் படக்கென காலியாகிவிடும். இதில் ஆப் அப்டேட் வேறு தேர்தல் காலத்து வேட்பாளர்களைப் போல அவ்வப்போது வந்து மே ஐ கம் இன் என கேட்கும். இத்தனை இடர்களையும் தாண்டி உங்கள் மொபைல் டேட்டாவை சேமிக்க எளிதான டிப்ஸ் இவை. பார்த்து, படித்து பயன்பெறுக.

Chrome data saver:

க்ரோம் பக்கங்களில்தான் அதிக நேரம் செலவிடுவோம் என்பதால் அவைதான் டேட்டாவை அதிகம் காலி செய்யும். எனவே க்ரோம் செட்டிங்ஸில் டேட்டா சேவரை ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் பிரவுஸ் செய்யும்போது பக்கங்கள் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகும். ஆனால் டேட்டா கண்டிப்பாக நிறையவே மிச்சப்படும்.

Opera video Compression:

வீடியோ கண்டிப்பாய் நிறைய டேட்டா சாப்பிடும். எனவே நீங்கள் வீடியோ அதிகம் பார்ப்பவராய் இருந்தால் ஓபரா பிரவுஸர் டவுன்லோட் செய்து அதில் வீடியோ கம்ப்ரஸன் ஆப்ஷனை செலக்ட் செய்துகொள்ளுங்கள். கண்டிப்பாய் பலனளிக்கும்.

Restrict background data:

பயன்படுத்தாத ஆப்ஸாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவு டேட்டாவை தின்றுகொண்டே இருக்கும். எனவே செட்டிங்ஸில் Restrict background data ஆப்ஷனை செலக்ட் செய்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் டேட்டா செலவாவது தவிர்க்கப்படும்.

தவிர்க்க ஆட்டோ - அப்டேட்:

ஆட்டோ அப்டேட்களை தப்பித் தவறி கூட மொபைல் டேட்டா ஆப்ஷனில் தந்துவிடாதீர்கள். எப்போதும் வைஃபையில் மட்டுமே கனெக்ட் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் டேட்டாவை சூப்பர் ஹீரோவால் கூட காப்பாற்ற முடியாது.

ஆப்லைன் மோடை பயன்படுத்துங்கள்:

இணையத்தில் அதிகம் பாடல்கள் கேட்பவராய் இருந்தால் ஒரு தடவை ஸ்ட்ரீம் ஆனதும் ஆப்லைன் சென்றுவிடுங்கள். பின் எத்தனை முறை கேட்டாலும் டேட்டா செலவாகாது.

டேட்டா மேல் கண் வையுங்கள்:

ஃபேஸ்புக் போன்ற சில ஆப்கள் அதிகம் டேட்டாவை உள்வாங்கும். எனவே டேட்டா லிமிட் செட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. வேறு வழியே இல்லையென்றால் அதிகம் சாப்பிடும் ஆப்ஸை கருணை காட்டாமல் தூக்கிவிடுங்கள்.

விளம்பரம் தவிர்க்க:

வீடியோக்கள் அளவிற்கு விளம்பரங்களும் டேட்டாவை காலி பண்ணும். எனவே முடிந்த அவரை விளம்பரங்களை ஸ்கிப் செய்துவிடுங்கள்.

மெயிலை மேனுவலாய் சிங்க் செய்யுங்கள்:

ஜிமெயில் அதிகம் பயன்படுத்துபவராய் இருந்தாலும் சிக்கல்தான். டாக்குமென்ட்கள் டேட்டா தின்னிகள். எனவே ஆட்டோ சிங்க் செய்வதை முடிந்தவரை தடுத்துவிடுங்கள். எப்போதும் மேனுவல் மெயில் சிங்க் தான் நல்லது.

-நித்திஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close