Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னொரு சீன சூப்பர்ஸ்டார் 12-ஆம் தேதி வருகிறார்

மேக் இன் இந்தியா என மோடி முழங்கிக் கொண்டு இருக்க, சீனாவின் லீ ஈகோ நிறுவனம் மேட் ஃபார் இந்தியா என புது மொபைல் ஒன்றை அடுத்த வாரம் வெளியிட இருக்கிறது. லீ 1ஸ் என்று அவர்கள் ஏற்கனவே வெளியிட்ட மொபைல், சந்தையில் கலக்கிக் கொண்டு இருக்க,  தற்போது அதன் அடுத்த வெர்ஷனான லீ 1எஸ் (ஈகோ)வை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான லீ 1எஸ் மொபைல் இதுவரையில் 2 லட்ச மாடல்கள் விற்று இருக்கின்றன. ஆன்லைன்  வர்த்தகத்தில், இந்த ஆண்டின் லீடிங் ஹிட்டர் லீ 1எஸ் தான். வரும் மே 12-ம் தேதி அவர்கள் வெளியிட இருக்கும் லீ 1எஸ்(ஈகோ) மாடலுக்கு தற்போதே பலர் வெயிட்டிங் . அதற்கு காரணம் 10,899 என் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் அந்த மொபைலின் முதல் 1 லட்சம் ஆர்டர்களுக்கு 9,999 ரூபாய் என சலுகை விலையில் அளிக்க இருக்கிறது லீ ஈகோ.

5.5” ஃபுல் எச்டி டிஸ்பிளே, 6.0 ஆண்டிராய்டு மார்ஷ்மெல்லோ அப்டேட்ஸ்,3 ஜிபி ராம், 1.8GHz ஆக்டோ கோர் பிராசஸர்,32 ஜிபி இண்டர்னல் மெமரி, ஃபின்ங்கர் ப்ரிண்ட் சென்சார், 13 மெகாபிக்ஸல் கேமரா, 5 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா,3000 mAh பேட்டரி, விரைவாக சார்ஜ் செய்யும் வசதி என கலக்குகிறது லீ 1எஸ் (ஈகோ). இந்த மொபைலிலும் மெமரி கார்டு போட முடியாது, ஆனால் 5டிபி வரை ஆன்லைனில் சேமித்து வைக்கும் வசதியை தருகிறது லீ ஈகோ.

12-ம் தேதி ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் மதியம் 2 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த மொபைல். தற்போதிருந்தே இந்த மொபைலுக்கு ரெஜிஸ்டர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ்.

ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மொபைலை ரெஜிஸ்டர் செய்யலாம்: http://bit.ly/1X8lo4q













 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close