Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நச்சுனு நாலு செட் ஆப் பாக்ஸ்!

லுமினிய ஆண்ட்டெனாவில் இருந்து பட்டர்ஃப்ளை ஆண்ட்டெனா வழியாக குடைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இந்த HD யுகத்தில் செட் டாப் பாக்ஸிலே அத்தனை வித்தியாசங்கள். உங்கள் டிவிக்கு எது செட் ஆகும்?
 
சன் டைரக்ட் செட் ஆப் பாக்ஸ்:
டி.வியில் சீரியல்கள் எப்படி பிரபலமோ.. அதே அளவு சன் டைரக்ட் செட்டாப்பாக்ஸும் பிரபலம். அந்த டன் டனா டன் விளம்பரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன? சன் டைரக்டின் சாதாரண செட்டாப் பாக்ஸ் விலை 1600 இல் இருந்து தொடங்குகிறது. எல்.சி.டி, எல்.ஈ.டி மாதிரியான டி.விக்களில் பயன்படுத்தும் ஹெச்.டி பாக்ஸ்கள் ரூ.1800 இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதன் சிறப்பம்சம் பயன்படுத்த மிக மிக எளிதானது, மொபைலைப் போல சின்ன சின்ன கடைகளிலும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மினிமம் ப்ளான் 150 ரூபாயில் இருந்து தொடக்கி அதிகபட்சமாக 300 வரை இருக்கிறது. எக்கனாமிக், பேஸிக், சினிமா ப்ளஸ் என இதில் பலவகை. முக்கியமாக இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பென் டிரைவ் வைத்து ரெகார்டும் செய்துகொள்ள முடியும்.
 
வீடியோ கான் செட் ஆப் பாக்ஸ்:
சாதாரண பாக்ஸ் 1700 ரூபாயிலும், ஹெச். டி பாக்ஸ் 2000 ரூபாயிலும் கிடைக்கிறது. இதன் ரிமோட் கன்ட்ரோலை டி.விக்கு நேராக காட்டி சேனலை மாற்றத் தேவையில்லை . ரேடியோ அலைவரிசை வசதி இருப்பதால் ரிமோட்டை பக்கத்து ரூமில் இருந்து அழுத்தினாலும் சேனல் மாறும். அதோடு வயர்லஸ் ஹெட் போனும் இருக்கிறது. ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு பக்கத்தில் இருப்பவருக்கு தொந்தரவு தராமல் டி.வி பார்க்கலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப சவுத் சில்வர், சவுத் சில்வர் ஸ்போர்ட்ஸ் என்று பல ப்ளான்கள் இருக்கிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு பிடித்த 3டி சேனலும் இதில் இருப்பது கூடுதல் ப்ளஸ்.
 
டிஷ் டி.வி செட் ஆப் பாக்ஸ்:
நார்மல் பாக்ஸ் 1600 ரூபாயிலும் ஹெச். டி 2000 ரூபாயிலும் கிடைக்கிறது. குறைந்த பட்ச ரீசார்ஜ் 99 ரூபாயிலும், அதிக பட்சம் 315 ரூபாய் வரையும் இருக்கிறது. தமிழ் சேனல்கள் தவிர ஹிந்தி சேனல்களும் இதில் அதிகம். இதே டிஷ் டி.வி நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு ஜின்க் டிஷ் இதில் தனித் தனி பேக்கேஜ்களாக சேனல்கள் கொடுக்கப்படுகிறது. தமிழ் பேக்கேஜில் 52 சேனல்கள். தெலுங்கில் 38 சேனல்கள் என்று மொழிவாரியாக பார்க்கலாம்.

ஏர்டெல் செட் ஆப் பாக்ஸ்:
நார்மல் பாக்ஸ் 1650 ரூபாயிலும் ஹெச்.டி 2000 ரூபாயிலும் கிடைக்கிறது. பொதுவாக ஹெச்.டி பாக்ஸில் நிகழ்ச்சிகளை ரெக்கார்டு செய்யலாம். ஆனால் இதில் அதிகபட்சமாக 750 மணி நேரம் ரெக்கார்டு செய்ய முடியும் என்பது ஹைலைட். கூடவே டால்பி டிஜிட்டல் சவுண்டும் இருக்கிறது. முக்கியமான காட்சிகளை நிறுத்தி தேவைப்படும்போது, அதிலிருந்து தொடர்ந்து பார்க்கமுடியும். தேவைப்பாட்டால் ரீவைண்ட் செய்தும், ஓட விட்டும் கூட பார்க்கலாம். ஸ்லோ மோஷன் வசதியும் இதில் இருக்கிறது. இதன் குறைந்த பட்ச ப்ளான் 156 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அளவில் சிறியதாக இருப்பதால் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாகவும் இருக்கும். இவற்றோடு நமக்கு எக்ஸ்ட்ரா சேனல்கள் தேவைப்பட்டால் ஆட் ஆன் என்கிற பெயரில் அவற்றையும் இணைத்துக்கொள்ளலாம். ஆட் ஆன் சேனல்கள் 10 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
 
-ஜுல்ஃபி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ