Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாடர்ன் நக்கீரர்களும், பக் பவுண்ட்டியும்

நீங்கள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் படிப்பதுண்டா? அதில் இருக்கும் எழுத்துப்பிழை, தகவல்பிழை, இலக்கணப்பிழைகளை சுட்டிக்காட்டினால், அடுத்த இதழில் அதற்கென ஒரு பகுதியை ஒதுக்கி குறிப்பிடுவார்கள். தவறைக் கண்டுபிடிப்பதற்காகவே பேப்பர் வாங்கிய ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், இது டெக்னோ யுகம்.

சில மாதங்களுக்கு முன் ஓலாவில் பயணம் செய்த ஒரு டெக்கீ, அதில் இருக்கும் ஒரு பிழையைக் குறிப்பிட்டு, இதை சரிசெய்யவில்லை என்றால், எல்லோரும் இலவசமாகவே ஓலாவில் பயணிக்க முடியும் என ஓலா நிறுவனத்திற்கு மெயில் ஒன்றை அனுப்பினார். அவர்கள் இந்த மெயிலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில நாட்கள் பார்த்த அந்த டெக்கி, அதன் கோடிங்கை இலவசமாகவே இணையத்தில் பதிவேற்றினார். இதுதான் இண்டர்னெட்டின் பலம். 

அதனால், மிகப்பெரிய நிறுவனங்கள் இதனை அவ்வளவு எளியதாக எடுத்துக்கொள்வதில்லை. டெக்னிக்கலாக ஒரு குறிப்பிட்ட தளத்தில், பிழை இருக்கிறதென்றால், அதை சுட்டிக்காட்டுபவருக்கு பரிசுகள் தந்து கெளரவிக்கிறார்கள். இதற்கு ’பக் பவுன்ட்டி புரோகிராம் (Bug bounty) என பெயர் வைத்து இருக்கிறார்கள். ஃபேஸ்புக், யாஹூ, கூகிள், ரெட்டிட், ஸ்க்வார் பொன்ற நிறுவனங்கள் இதனை நடைமுறையில் வைத்து இருக்கிறார்கள்.

’நீட் ஃபார் ஸ்பீட் ‘ NFS கேம் விளையாடி இருக்கிறீர்களா? பவுன்ட்டி என்று ஒன்று இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் போலீஸ் கண்களில் மிளகாயை தூவி, அவர்கள் சொல்லும் டார்கெட்டை பிடித்துவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு பவுன்ட்டி போனஸ் நிச்சயம். அதே தான் இங்கும். பொதுமக்கள் இவர்களது தளத்தில் இருக்கும் தவறுகளை கண்டுபிடித்து சுட்டும் முன், அந்த தவறுகளை ஏதேனும் ஒரு டெக்கி குறிப்பிட்டால், அவருக்கு பரிசுகளை அள்ளித் தருகிறார்கள்.

ஃபேஸ்புக் நிறுவனம் , இந்த வாரம் 10000 டாலர்களை ஒரு பத்து வயது ஃபின்லாந்து சிறுவனுக்கு அள்ளி வழங்கி இருக்கிறது. இன்ஸ்டாகிராமிலோ, ஃபேஸ்புக்கிலோ இயங்குவதற்கான குறைந்த பட்ச வயதைக்கூட இன்னமும் ஜனி என்ற சிறுவன் அடையவில்லை. ஆனால், அவன் கண்டுபிடித்த பிழை மூலம் யாருடைய கமென்ட்டையும் ஜனியால் அழிக்க முடியும். ”ஏதேனும் ஒரு கோடிங் எழுதினால், இன்ஸ்டாகிராம் தாக்குப்பிடிக்குமா? எனப் பார்த்தேன். இன்ஸ்டாகிராம் தாக்குப்பிடிக்க முடியவில்லை ”  என கூலாக சொல்கிறான் ஜனி. பணத்தை வைத்து பைக்கும், கால்பந்தும் வாங்க இருக்கிறான் ஜனி.

இத்தனைக்கும் ஜென் இசட் சிறுவன் ஜனி, கோடிங்கை எங்கு சென்றும் பயிலவில்லை. யூ-ட்யூபில் வரும் வீடியோக்களை வைத்தே , இன்ஸ்டாகிராமை ஹேக் செய்து இருக்கிறான்.

வாழ்க ‘மாடர்ன் நக்கீரர்கள்’.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ