Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது கேட்ஜெட் உலகின் டைம் டிராவல்

ளபள கண்ணாடிகள், பிரம்மாண்ட கட்டிடங்கள், கண்கவர் டெக்னாலஜிகள் என இப்போது நாம் பார்ப்பவை எல்லாமே டெக் நிறுவனங்களின் ஒரு பக்கம்தான். சின்ன விதைக்குள்தானே ஆலமரம்..அடடா ரொம்ப பழசு. சின்ன சிப் தானே மொத்த கேட்ஜெட்டுக்கும் அடிப்படை. அப்படி அவை தொடங்கிய காலத்திற்கும் இப்போது இருப்பதற்குமான 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' டைப் டைம் டிராவல் இது.

 ஆப்பிள்:

ஆப்பிளை 1976-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வீட்டு கேரேஜில்தான் தொடங்கினார். இல்லை, அது அவரின் பெட்ரூம் என சொல்பவர்களும் உண்டு. அவர் வீட்டின் அருகில் இருந்த வாண்டுகள்தான் அந்த நிறுவனத்தின் முதல் ஊழியர்கள்.

ஆப்பிளின் தற்போதைய தலைமை நிறுவனம் இது. 1993-ல் இங்கு வந்து செட்டிலானது இந்நிறுவனம். 850,000 சதுர அடி பிரம்மாண்டம் இது. இப்போது பக்கத்திலேயே இன்னும் பிரம்மாண்டமாய் தயாராகி வருகிறது ஸ்டீவ்வின் கனவு கேம்பஸ்.
 


ஹெச்.பி:

ஆப்பிளைப் போலவே ஹெச்.பியும் கேரேஜில் தொடங்கப்பட்டது தான். 1939-ல் வில்லியம், டேவ் இணைந்து இங்கே போட்ட பிள்ளையார் சுழிதான் இன்று பெருவிருட்சம். இந்த கேரேஜிற்கு 'சிலிக்கான் வேலியின் பிறப்பிடம்' என்ற பெயரும் உண்டு.

இதுதான் ஹெச்.பியின் தற்போதைய தலைமை நிறுவனம். கலிபோர்னியாவின் பாலோ அட்லோவில் இருக்கும் ராட்சஷ கண்ணாடி மாளிகை இது.


மைக்ரோசாஃப்ட்:

விண்டோஸ் விதை தூவப்பட்ட இடம் இது. 1975-ல் இந்த குட்டி பில்டிங்கில் தான் தன் சாம்ராஜ்யத்தை கட்டமைக்கத் தொடங்கினார் பில்கேட்ஸ்.

தற்போதைய தலைமை அலுவலகம் இது. வாஷிங்டன்னின் ரெட்மண்ட் நகரத்தில் 500 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் பிரம்மாண்ட கேம்பஸ். இங்கே மட்டும் 80 கட்டிடங்கள் உள்ளன.


சாம்சங்:

மொபைல் உலகின் முக்கிய ஐகானான சாம்சங் 1938-ல் தென் கொரியாவின் டியாகு நகரில் நூடுல்ஸ் விற்கும் நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த டெண்ட் கொட்டாய் நிறுவனம்தான் பின்னாளில் டெக் உலகை ஆளும் என யார் நினைத்திருப்பார்கள்.

தென்கொரியாவில் உள்ள தற்போதைய தலைமை அலுவலகம் இது. எலக்ட்ரானிக்ஸ், லைஃப் இன்சூரன்ஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய பலமாடி பளிங்கு மாளிகை.
 


சோனி:

1946-ல் சோனி நிறுவனம் தொடங்கப்பட்டது இங்குதான். இவ்வளவு பெரிய கட்டிடமா என நினைத்து விடாதீர்கள். இந்த டிபபார்ட்மெண்டல் ஸ்டோரின் ஒரு மூலையில் சின்னதாய் தொடங்கப்பட்ட எலக்ட்ரானிக் கடைதான் அது.

இது சோனியின் தற்போதைய தலைமை அலுவலகம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சோனி சிட்டி என்ற பிரம்மாண்ட கேம்பஸ் அது. எந்தப் பக்கம் திரும்பினாலும் முகம் தெரியுமளவிற்கு கண்ணாடி மாளிகைகள் மினுக்கின்றன.
 


கூகுள்:

ஆப்பிள் போல தான் கூகுளும். 1998-ல் கலிபோர்னியாவில் நண்பன் ஒருவனின் கேரேஜில்தான் கூகுள் நிறுவனத்தை தொடங்கினார்கள் லாரி பேஜும் செர்ஜி பிரினும்.

கலிபோர்னியாவில் இருக்கும் கூகுளின் தற்போதைய தலைமை அலுவலகம் இது. 2,000,000 சதுர அடியில் விரிந்திருக்கும் மகா சாம்ராஜ்யம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ