Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் பிக்காசூக்களை பிடிக்கிறீர்களா? சற்றே கவனம்

ணவருந்தச் செல்லும் ஹோட்டல்கள் துவங்கி வகுப்பறையின் உள்ளே வரை பிக்காசூக்களைத் தேடி ஒரு கூட்டம் செல்போனும் கையுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம் “போக்கிமான் கோ" இந்த வார்த்தையை உச்சரிக்காத ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்களே இருக்க முடியாது எனலாம். "ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி" தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, நிஜ உலகத்தில் மாய உலகின் பூச்சிகளை  பிடிப்பதே ஆகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த “நயாண்டிக்" என்னும் மென்பொருள் நிறுவனம்தான் "போக்கிமான் கோ"வை இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற சில நாடுகளில் வெளியிட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வெளியிட்டு வருகிறது. இதுவரை கேமிங் உலகம் காணாத வகையில் வரவேற்பைப் பெற்றுள்ளதால், இந்த கேம் வெளியிடப்படாத நாடுகளைச் சேர்ந்த மக்களும் இதை எப்படியும் விளையாடியே தீரவேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் மூன்றாம் தரப்பு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்...மன்னிக்கவும், ஓடிக் கொண்டிருக்கின்றனர்.



APK எனப்படும் “ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பேக்கேஜ்" வகை ஃபைல்களான இவற்றை அதிகாரப்பூர்வமற்ற வெளிநாட்டு இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விளையாடுபவர்களை  "புரூப் பாயிண்ட்" என்னும் இணையதள குற்ற ஆய்வு நிறுவனம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.  'போக்கிமான் கோ' கேம் வெளியிடப்படாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இந்த செயலியைப் பதிவிறக்குவதைக் கண்டறிந்த ஹேக்கர்ஸ், இந்த APK ஃபைல்களுடன் மால்வேர்களை இணைத்து அவர்களின் இணையதளங்களில் வெளியிடுகின்றனர்.

இதை அறியாத கேம் பிரியர்கள், அதை இன்ஸ்டால் செய்வதன் மூலம் தங்களின் அந்தரங்க தகவல்கள் மற்றும் மொபைலின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் அந்த ஹேக்கர்ஸ்களிடம் இழந்துவிடுவதாகவும், இதை தங்களின் சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட் ஆப் ஸ்டோரில் அதிகாரபூர்வமாக இருக்கும் பல செயலிகளே அபாயகரமானவை என்று இருக்கும் நிலையில், மூன்றாம் தர இணையதளங்கள் வழங்கும் செயலிகளின் நம்பகத்தன்மையை நீங்களே நினைத்துப் பாருங்கள். இதுவரை 31 நாடுகளில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள "போக்கிமான் கோ" விரைவில் நம் நாட்டிலும் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இனி இந்திய வீதிகளில் பிக்காசூவை தேடாதீர்கள். அது உங்கள் ரகசியத் தகவல்களுக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கலாம். அதிகாரபூர்வமாக 'போக்கிமான் கோ' கேம் இந்தியாவில் வெளியிடப்படும்வரை காத்துக்கிட்டு இருப்போம் ரசிகர்களே!

- ஜெ.சாய்ராம். 
மாணவப் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close