Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5ஜி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது கனடா!

னடாவைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பெல் மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியாவும் சேர்ந்து, 5ம் தலைமுறைக்கான இணைய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

கனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல், ரோஜர்ஸ் மற்றும் டெலஸ் ஆகிய மூன்றும் போட்டிப் போட்டுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கான இணையதள தொழில்நுட்பத்தைப் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக பெல் நிறுவனமானது, நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.  

கனடாவின்  தற்போதைய சராசரி இணையதள வேகத்தைவிட ஆறு மடங்கு இணையதள வேகத்தை அளிக்கும் வகையிலான 5ஜி தொழில்நுட்பத்தை கனடாவின் மிசிசாகாவில் உள்ள பெல் நிறுவனத்தின் ஆய்வு மையத்தில் சமீபத்தில் பரிசோதித்தனர். கனெக்டிவிட்டி பிரச்னைகள் பெரிய அளவில் 5ஜியில் குறைக்கப்படும் என உறுதி அளிக்கிறார்கள் பெல் நிறுவனத்தினர். அப்போது அலைக்கற்றை 73 GHz ஆகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களின் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாகவும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பெல் நிறுவனம், 'இந்த ஆராய்ச்சியானது அடுத்த தலைமுறைக்கான இணையதள வேகத்தை உறுதி செய்யும் NGMN கூட்டமைப்பின் குறிக்கோள்களை 2020ம் ஆண்டுக்குள் அடைந்திட வழி வகுக்கும்' என தெரிவித்துள்ளது.

இன்னும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால், இந்த 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. இந்தியாவில் 2ஜிக்கும் 3ஜிக்கும், 3ஜிக்கும் 4ஜிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாத நிலையிலேயே பயன்படுத்தி வரும் நமக்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக, எப்படியும், நம்ம ஊருக்கு 2040-க்குள் 5ஜி வந்துவிடும் என்பதால்,  நம்பிக்கையோடு காத்திருப்போம் மக்களே!

- ஜெ.சாய்ராம்
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ