Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நௌகட்டில் புதுசா என்ன இருக்கு? #AndroidNougat

                             

கிட்காட் (K) ,லாலிபாப் (L), மார்ஷ்மெல்லோவ் (M) என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப் பொருட்களின் வைப்பதுதான் கூகுளின் வழக்கம். அதில் அடுத்த வெர்ஷனுக்கு, இந்திய உணவான 'நெய்யப்பம்' என்றுதான் பெயரிடப்படும் என நாம் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு 'நௌகட்' எனப் பெயரில் ட்விஸ்ட் வைத்தது கூகுள். தற்போது அந்த 'நௌகட்'-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது கூகுள். 

நௌகட் (N) அப்டேட் முதலில் கூகுளின் நெக்சஸ் டிவைஸ்களில், பீட்டா பயன்பாட்டிற்கு வரும் எனவும், பிறகு அனைத்து போன்களிலும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக நெக்சஸ் 6, நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் 9, நெக்சஸ் பிளேயர், பிக்ஸல் C டேப்லட் ஆகியவற்றில் செயல்பாட்டிற்கு வரும். மொத்தம் 250 புதிய மாற்றங்கள் நௌகட்டில் இருக்கும் என சொன்னது கூகுள். எப்படி இருக்கிறது நௌகட்?

1. நௌகட்டில் மொத்தம் 1500 இமோஜிக்களை வைத்துள்ளது கூகுள். இவற்றில் 72 இமொஜிக்கள் புதியவை.
பல மொழிகளை, ஒரே போனில் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் வடிவமைப்பு இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.

                      
2. இரண்டு ஆப்களை நீங்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதற்காக ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் என்ற ஆப்ஷன் இருக்கிறது. உதாரணமாக நீங்கள், படம் பார்த்துக் கொண்டே கூட, மெசேஜ் அனுப்பலாம். 

                               
3. கேம் பிரியர்களுக்கும் நௌகட் புதிய அனுபவத்தை தருகிறது. அத்துடன் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளுக்கும் ஏற்றவகையில், நௌகட் வடிவமைக்கபப்ட்டுள்ளது.


4. நமது பேட்டரி திறனை மேம்படுத்தவும், மின்சக்தி வீணாகாமல் தடுக்கவும், முந்தைய மார்ஷ்மல்லோவில் இருந்த, டோஸ் ஆப்ஷன் போலவே, இதிலும் Dozier என்ற ஆப்ஷன் இருக்கிறது.


5. மொபைலின் நோட்டிபிகேஷன் டிஸ்ப்ளே பகுதியை நம் வசதிக்கேற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அத்துடன் நோட்டிபிகேஷன்கள் தனியாக, நோட்டிபிகேஷன் பாரில் இல்லாமல், மெயின் ஸ்க்ரீனிலேயே பார்க்கவும், அதைத் திறக்கவும் முடியும்.

                                            
6. மொபைலின் எழுத்துக்களின் அளவை நாம் மாற்றமுடியாது. ஆனால் நௌகட்டில் அதற்குப் பதிலாக ஐகான் அளவுகளை நம்மால் மாற்ற முடியும்.


மார்ஷ்மெல்லோ அப்டேட் வந்துவிட்ட போதிலும் கூட, இதுவரை 15% ஆண்ட்ராய்டு யூசர்கள்தான் மார்ஷமல்லோவை அப்டேட் செய்துள்ளனர். அதற்கு முந்தைய கிட்கட் வெர்ஷன் பயன்படுத்துபவர்கள் கூட, வெறும் 30 சதவீத்திற்கும் குறைவுதான். எனவே அனைத்து ஆண்ட்ராய்டு டிவைஸ்களையும், அப்டேட் செய்யவைக்கும் அளவுக்கு 'நௌகட்' கெத்தா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


- இ.அன்பரசு 
(மாணவப் பத்திரிகையாளர்)
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ