Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விகடன் ஹேக்கத்தான்

IT நிறுவனங்களிலும், கல்லூரிகளிலும் பிரபலமானதொரு பெயர் ஹேக்கத்தான்.கல்லூரிகளில் புதிர் போட்டிகளுக்கு இப்படி ஹேக்கத்தான் என பெயர் வைப்பார்கள்.நிறுவனங்களில் மட்டுமே பிரச்னைகள்,தீர்வுகள் என இந்த ஹேக்கத்தான் அதன் சிறகை விரிக்கும். அப்ப, இது system hacking பற்றி இல்லையா ? என்கிறீர்களா. sorry, hackers இது மக்களுக்கான களம். விகடன் மக்களின் பிரச்னைகளுக்காக டெக்னோவின் உதவியுடன் களம் இறங்க இருக்கிறது.

என்ன டெக்கீஸ் நீங்க தயாரா?


ஐடி செக்டாரில் வேலை பார்ப்பவர்கள் என்றாலே, மக்களின் மீது, குறிப்பாக மக்கள் பிரச்னைகளின் மீது எந்த புரிதலும் இல்லாமல் இருப்பார்கள் என்ற கருத்து இருக்கிறது. அந்த  நிலையை மாற்றலாமா?. ஒரு விஷயத்தை ஒரு கோணத்தில் பார்க்கிறோம்.ஒரு முடிவு வருகிறது.வேறொரு முடிவுக்கும் அதே கோணத்திலா பார்ப்போம்?.Think out of the box dudeனு டீம் லீட் சொல்லியிருப்பார்ல. அதே தான். இதுல பங்கேற்பது ரொம்ப சிம்பிள் ப்ரோ. 


Education,Agriculture, Environment, Empowerment & Employabilty, Civic Life & Community Power இந்த டாபிக்ஸ்ல மக்கள் சந்திக்கும் ஏதோவொரு பிரச்னைக்கு உங்களால தீர்வு சொல்ல முடியுமா? நீங்க தான் ப்ரோ வின்னர்.  நான் சொல்லப்போகும் பிரச்னையும், தீர்வும் இதில் அடங்காது என நினைக்கிறீர்களா?. இருக்கவே இருக்கு Wildcard entry. இங்க பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்ல. தீர்வுகளுக்குத்தான்.

 
நீங்க செயல்படுத்திக்காட்டும் தீர்வு,ஒரு நிகழ்வை மாற்றி அமைக்கலாம்.ஒரு பெரும் மாற்றத்திற்கு பட்டாம்பூச்சியின் சிறகு அசைவுகள் கூட காரணமாக இருக்கலாம்.

 

சென்னை தரமணில இருக்கும் அசெண்டாஸ்ல September month end நடக்கப்போற hackathonக்கு as of now, நீங்க  பண்ண வேண்டியது register மட்டும் தான். 

பிரச்னையும் தீர்வும்

இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லை.அப்படி இருக்கும் ஒரு சூழலில், அங்கு இருக்கும் குழந்தைகளின் மருத்துவ வசதிகளோ, தடுப்பூசி பற்றிய பதிவுகளையோ சேமிப்பது என்பது கடினமான காரியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு குழு  அறிவித்து இருக்கும் NFC நெக்லெஸ் மூலம், குழந்தையின் தடுப்பூசி பதிவுகள், இதில் சேமித்து வைக்கப்படும். மொபைலில் இருக்கும் செயலி, மூலம், இதனை அங்கு வரும் NGOக்கள் ஆய்வு செய்து அடுத்தகட்ட மருந்துகளை வழங்க முடியும்.

 

 

 

இன்னும் புரியலையா  ? 


For Oxfords http://hackathon.vikatan.com/index.html

இதைப் படிங்க பாஸ் http://hackathon.vikatan.com/tindex.html


Think Big.We are here with U to Make it 


See U Soon In Ascendas

எடிட்டர் சாய்ஸ்

MUST READ