Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 GB டேட்டா 50 ரூபாய்! அசரவைத்த அம்பானி! ஜியோவில் வேறு என்ன ஸ்பெஷல்? #RelianceAGM

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று மும்பையில் நடந்த அந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தை அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், பங்குதாரர்கள் மட்டுமின்றி பல லட்சம் பேர் அந்த உரையைக் கவனிக்கின்றனர் . 42 ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஒன்று 'லைவ்' செய்யப்படுவதும் இதுவே முதல் முறை. முகேஷ் அம்பானியின் உரைக்குப் பின்னர், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது, #RelianceAGM ஹேஷ்டேக். பங்குசந்தைகளில் மற்ற நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்படுகிறது. ஸ்ஸ்ஸ்..இத்தனை விஷயங்களுக்கும் காரணமான ஒரே விஷயம் 'ரிலையன்ஸ் ஜியோ'. ரிலையன்ஸ் ஜியோ 4G சேவையை அறிமுகப்படுத்தும் இந்த விழாவில், பேசிய முகேஷ் அம்பானியின் பேச்சின் ஹைலைட்ஸ் இங்கே!

"இதுவரையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்த ரிலையன்ஸ் ஜியோ திட்டம்தான். பிரதமர் மோடியின் கனவான 'டிஜிட்டல் இந்தியா'-வை ஜியோ நிறைவற்றும். இந்த திட்டத்தினை அவருக்கும், இந்தியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். தற்போது நீங்கள் மட்டும் டிஜிட்டல் உலகில் இல்லையெனில், நீங்கள் பின்தங்க நேரிடும்.அதனை இந்த ஜியோ மாற்றும். ஜியோ என்றால் வாழ்வு என அர்த்தம். இவ்வுலகில் வாழ்க்கையை விட நமக்கு பெரிதான விஷயம் எதுவுமில்லை. வாழ்வதற்கு எப்படி ஆக்சிஜன் தேவையோ, அதைப் போலவே டிஜிட்டல் உலகில் ஆக்சிஜன் என்பது டேட்டா. உங்கள் வாழ்வை நாங்கள் மதிக்கிறோம். அதற்காகவே நாங்கள் உருவாக்கியதுதான் இந்த ஜியோ. 

உலகில் டேட்டாவிற்கான தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம் என எல்லாவற்றிலும் இந்த இணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் டேட்டா பற்றாக்குறை என்ற நிலையை ஜியோ மாற்றும். உலகில்  தற்போது மிகப்பெரிய 4G நிறுவனம் நாங்கள்தான். 4G சேவையை மட்டுமே, கொண்டுள்ள ஒரே நிறுவனமும் நாங்கள்தான். இந்த சேவையில் கால் டிராப் என்பது மிகவும் குறைவாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ தற்போது 18,000 நகரங்களிலும், 2 லட்சம் கிராமங்களிலும் உள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், ஜியோ 90% இந்திய மக்கள் தொகையை, வாடிக்கையாளர்களாக கொண்டிருப்போம். 
ஜியோவின் விலைப்பட்டியலின் நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் ஜியோ பயன்படுத்தினால், வாய்ஸ் காலிங் அல்லது டேட்டா இரண்டில் ஒன்றிற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். மற்றொன்று இலவசம். இந்தியா முழுக்க, ரோமிங் கட்டணமே கிடையாது. ஜியோவின் டேட்டா கட்டணங்கள் உலகிலேயே மிகவும் மலிவானது. 1 GB டேட்டா, 50 ரூபாய்தான். அதாவது 1 MB டேட்டாவின்  விலை 5 பைசாதான். நீங்கள் அதிகம் பயன்படுத்துங்கள். ஆனால் குறைவாக பணம் செலுத்துங்கள்.

அத்துடன் ஜியோ இந்தியா முழுக்க, பொது இடங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் டேட்டா கட்டணத்தை மேலும் சேமிக்க முடியும். மாணவர்களுக்கு ஜியோ மேலும் சிறப்பு சலுகையை அளிக்கிறது. ID கார்டை மட்டும் மாணவர்கள் வைத்திருந்தால் போதும். எங்கள் டேட்டா விலையில் மேலும் 25% சலுகையை அவர்கள் பெற முடியும். வருகிற 5-ம் தேதி முதல் ஜியோ சேவை துவங்குகிறது. இந்த ஆண்டின் டிசம்பர்  31 வரை வாய்ஸ் மற்றும் டேட்டா இரண்டும் முற்றிலும் இலவசம். உலகிலேயே மிகப்பெரிய அறிமுக சலுகை இதுதான். நான் நிர்ணயித்த கடினமான இலக்குகளை, எங்கள் ஊழியர்கள் மிக விரைவில் அடைந்து விட்டார்கள். இனி எங்கள் அடுத்த இலக்கு 100 மில்லியன் வாடிக்கையாளர்கள். அரசுக்கு அதிகம் வரி செலுத்திய நிறுவனம் ரிலையன்ஸ்தான். 7827 கோடி ரூபாயை வரியாக செலுத்தியுள்ளோம். " எனப் பேசினார்.

இனி ரிலையன்ஸ்க்கு டஃப் கொடுக்க, மற்ற நிறுவனங்களும் இதே போல அதிரடி காட்டலாம். அனைத்தையும்* அனுபவிக்கப்போவது நாம்தான்! 

*Conditions Apply

முகேஷ் அம்பானி பேசிய வீடியோ..

- ஞா.சுதாகர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ