Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

12GB ரேம், 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சான் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த 'டுரிங் ரோபோட்டிக்' என்ற ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக 12 GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போனின் சிறப்பம்சங்கள்:

60 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமிராவும், 20 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமிரா, தனித்தனியாக இரண்டு 256 GB ஸ்டோரேஜ் வசதிகள் , மெமரி கார்டு மூலம் 500 GB வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளும் வசதி, ஆக மொத்தம் 1 TB ஸ்டோரேஜ் வசதி உள்ள இந்த போனில் 4 சிம்கார்டுகளை பயன்படுத்த முடியும்.

செயற்கை அறிவுத்திறனுடன் கூடிய சக்தி வாய்ந்த பிராசஸ‌ர் இந்த போனில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய பேட்டரிகளை விட 3 மடங்கு அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் பியூயல்களால் உருவாக்கப்பட்ட பேட்டரியும், கைரேகை மூலம் போனை லாக் செய்யும் பயோமெட்ரிக், பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வசதிகளும் உண்டு. வாய்ஸ் மூலம் போனை 'ஆன்' மற்றும் 'ஆப்' செய்யும் வசதி இருப்பினும் இந்த போன் முதலில் ஸ்வார்டுபிஷ் என்ற இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹ.ச.ஷஃபியுல்லா
மாணவ பத்திரிகையாளர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ