Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபோன் 6S, 6S + , 5SE விலை குறைகிறது..! எவ்வளவு?


வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஐபோன் 7 , 7 பிளஸ் ஆகிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஒவ்வொரு முறையும் புது மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் போது, அதன் முந்தைய மாடல் விலைகளை குறைப்பது ஐபோனின் வழக்கம். 

 


ஐபோன் 6s (128ஜிபி ), ஐபோன் 6s பிளஸ் (128 ஜிபி), ஐபோன் 5SE (64ஜிபி)  போன்ற மொபைல்களின் விலையை 22,000 ரூபாய் வரை குறைக்கிறது ஆப்பிள் நிறுவனம். 128ஜிபி மொபைலான ஐபோன் 6S இதுவரை 82,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த மாடலின் தற்போதைய விலை 60,000 ரூபாய்.அதே போல் 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஐபோன் 6S பிளஸ் இனி 70,000 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


49,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஐபோன் SE (64 ஜிபி)  , இனி 44,000 ரூபாய்க்கு விற்கப்படும். 


அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ஐபோன் 7, 7 பிளஸ் மாடல்கள் 32,128 ,256 ஜிபி மெமரியுடன் மட்டுமே வெளியாகிறது. சில அப்கிரேடுகளைத் தவிர ஐபோன் 6sக்கும், ஐபோன் 7க்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், விலை குறைக்கப்பட்ட 6s பலரை வாங்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close