Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டரின் புது அப்டேட்டில் என்ன விசேஷம்?

ன்று எத்தனை சோஷியல் மீடியாக்கள் இருந்தாலும், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மீதான ஈர்ப்பு குறையாமல் இருப்பதற்கு காரணமே அவற்றின் தனித்தன்மைதான். 140 எழுத்துக்களில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் ட்விட்டருக்கு அதில் எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் '140 எழுத்துக்கள்' என்ற தனித்துவத்தை மாற்றாமல், பயனாளிகளுக்கு ஏற்றவாறு அதனை மேலும் மெருகேற்றியுள்ளது ட்விட்டர். ட்விட்டரின் புது அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?

இதற்கு முன்பு, நாம் எழுதும் ட்வீட்களில் இணைக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், GIF ஆகியவை அனைத்தும், நமது 140 எழுத்துக்களின் மீது கைவைக்கும். ட்வீட்டில் ஒரு போட்டோ இணைத்தால், 23 எழுத்துக்கள் தீர்ந்துவிடும். இந்தக் கட்டுப்பாட்டை நேற்று முதல் தளர்த்தியுள்ளது ட்விட்டர். இதன் மூலம் இனி ட்வீட் செய்யும்போது, போட்டோக்கள், வீடியோக்கள், GIFமற்றும் போல் (Poll) எனப்படும் வாக்கெடுப்புகள் ஆகிய நான்கு விஷயங்களும், அந்த 140 எழுத்துக்களில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதனை ட்விட்டர் தனது பக்கத்தில் 139 எழுத்துக்கள் மற்றும் ஒரு GIFஅடங்கிய ட்வீட்டுடன்  அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டுள்ளது.

அத்துடன் நீங்கள் Quote செய்யும் ட்வீட்களும் இந்த 140 எழுத்துக்களுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ட்வீட்டில் நாம் @ குறியீடுடன் சேர்க்கும், பயனாளர்களின் பெயரும், ரிப்ளை செய்யும் போதும் சேர்க்கும் பயனாளர்களின் பெயரும் இதே போல கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மே மாதம் அறிவித்திருந்தது ட்விட்டர். ஆனால் அது இந்த அப்டேட்டில் இல்லை. யூசர்நேம் எனப்படும் பயனாளர்களின் பெயரையும், இதே போல கணக்கில் சேர்க்காமல் இருக்கும் வசதியை சோதித்து வருவதாகவும், விரைவில் அதுவும் நடைமுறைக்கு வரும் என ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது எப்போது என்ற விவரம் தெரியவில்லை.

அதே போல ஏதேனும் இணைய பக்கத்தின் லிங்க்கை, இணைத்து ட்வீட் செய்யும் போதும் அது அந்த எழுத்தில் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனையும் மாற்றியிருக்கலாம். தற்போது ட்விட்டர் சேர்த்திருக்கும் இந்த மாற்றம் புதிது என்றாலும் கூட, மிகவும் தாமதமான முடிவு. ஏற்கனவே ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு இது உதவிகரமாக இருந்தாலும், புதிய பயனாளர்களை ட்விட்டரை நோக்கி இழுக்க வாய்ப்பில்லை. 

- ஞா.சுதாகர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ