Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூ-டியூப் கோ, இலவச வைஃபை.. கூகுளின் அடுத்த இலக்கு... இந்தியா! #GoogleForIndia

கூகுள் நிறுவனம் நேற்றுதான் தனது 18-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. அந்த சந்தோஷத்துடன் இந்தியாவில் தனது எல்லைகளை விரிவுபடுத்த புதுப்புது அறிவிப்புகளையும் நேற்று வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். 2G நெட்வொர்க் கனெக்ஷன், இணைய வசதி இல்லாத ஊர்கள் போன்ற இந்தியாவின் இணைய சிக்கல்களை குறிவைத்து இந்தியாவிற்கென பிரத்யேக அப்டேட்ஸ்களை அறிவித்துள்ளது கூகுள். நேற்று டெல்லியில் நடைபெற்ற Google for India நிகழ்ச்சியில்தான் இந்த அறிவிப்புகள் வெளியானது. கூகுளின் டார்கெட் என்ன?

கூகுள் இந்த நிகழ்வில் YouTube Go  எனப்படும் YouTube-ன் புதிய ஆண்ட்ராய்ட் ஆப், Google Station எனப்படும் இலவச Wi-Fi சேவை, 2g நெட்வொர்க்கில் சிறப்பாக இயங்கும் விதமாக Google Play Store, ஆஃப்லைன் வசதி கொண்ட Google Chrome,இந்தியில் வரவிருக்கும் Alloவின் கூகுள் அஸிஸ்டன்ட் போன்றவைதான் கூகுளின் நேற்றைய அறிவிப்புகள். இதில் என்ன விசேஷம்?

யூ-டியூப் கோ:

நேற்றைய அறிவிப்புகளில் அதிகம் லைக்ஸ் அள்ளியது, YouTube Go பற்றிய அறிவிப்பு தான். "ஒரு நொடிக்கு மூன்று இந்தியர்கள் புதிதாக, ஆன்லைன் வருகிறார்கள். ஒருமணி நேரத்திற்கு 10,000 இந்தியர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சேவை அளிப்பது எங்கள் கடமை என்று கருதுகிறோம்,  வருங்காலத்தில் இந்த உலகம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போகும் விதத்தை அறிந்தே, வளரும் தலைமுறைக்காக சேவைகளை உருவாக்குகின்றோம். இணையம் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு நிறைய தடைகள் இருக்கின்றன. அவற்றை மனதில் வைத்தே இந்த புதிய வசதிகளை உருவாக்கியுள்ளோம்."என்றார் கூகுளின் நிர்வாகி சீசர் செங்குப்தா.
YouTube Go-வில் மிக மெதுவாக உள்ள  நெட்வொர்க்கிலும் தடையின்றி வீடியோக்களை பார்க்கலாம். அதுதான் இதன் முதல் நோக்கம். Wi-Fi direct ஐ பயன்படுத்தி, இணையம் இல்லாமலே வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் இது அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதன் இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை க்ளிக் செய்தவுடன் மிகக் குறைந்த அளவிலான bandwidth-ல் அந்த வீடியோவின் preview-ஐ காணலாம், இது நம் டேட்டா பேலன்ஸை வெகுவாக மிச்சப்படுத்தும்.

கூகுள் ஸ்டேஷன்:

கூகுளின் மற்றொரு புது வரவான Google Station வருங்காலத்தில் இணையத்திற்கான பிம்பத்தை மாற்றியமைக்கப் போகின்றது.ஏற்கனவே 32 நகரங்களில் 50 ரயில் நிலையங்களில் தன் Wi-Fi சேவையை அளித்துவரும் கூகுள் தன் Google Station திட்டத்தின் மூலம் ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், காப்பி ஷாப்கள் போன்ற இடங்களிலும் தன் Wi-Fi சேவையை அளிக்கவுள்ளது.2020-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 650 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்படுகிறது,இதனை அறிந்தே கூகுள் இந்தியாவில் தன் இருப்பை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.தற்போது கூகுள் வைஃபை வசதியை 15,000 பேர் தினமும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனை மேலும் அதிகரிக்க உள்ளது கூகுள்.

அலோ இந்தி அசிஸ்டன்ட்:

கூகுளின் புதிய செயலியான அலோவில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் வசதி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இயங்குகிறது. இந்த சேவையை இந்தி மொழியிலும் வழங்க உள்ளது கூகுள். விரைவில் மேலும் பல இந்திய மொழிகளை இதில் இணைக்கும் என நம்பலாம்.

கூகுள் ப்ளே மற்றும் குரோம் பிரவுசர்:

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் குரோம் பிரவுசரை பெரும்பாலும் 2G கனெக்ஷனில் வேகமாக  பயன்படுத்த முடியாது. குரோம் பிரவுசரில் டேட்டா சேவர் போன்ற ஆப்ஷன்கள் தற்போது, இருந்தாலும் இன்னும் ஸ்லோ இன்டர்நெட் இருக்கும் இடங்களில் சிறப்பாக செயல்படுவதில்லை. இதற்காக குறைவான இணைய வேகத்திலும் இயங்க கூகுள் ஏற்பாடு செய்யவுள்ளது. கூகுள் லைட் வெப் போன்ற வசதிகள், குரோம் பிரவுசரில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

"இணையம் இல்லாமல், பயன்படுத்தும் கூகுள் மேப்ஸ் சேவையை உருவாக்க இந்தியாதான் தூண்டுதலாக இருந்தது. தற்போது அந்த சேவை அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் மலைப்பகுதிகள், கிராமப்புறங்கள் போன்ற இணையம் இல்லாத இடங்களில் பயன்படுத்த சிறப்பாக இருக்கிறது. இதுபோல இந்தியா நாங்கள் சிறப்பாக செயல்பட எப்போதும் யோசனைகளை வழங்குகிறது" என்கிறது கூகுள். 
120 கோடி இந்தியர்கள். 120 கோடி வாடிக்கையாளர்கள். கூகுள் சும்மா இருக்குமா என்ன?

க.விக்னேஸ்வரன், அ.அருணசுபா
மாணவப் பத்திரிகையாளர்கள்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ