Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிக் பில்லியன் டே... இந்த 3 க்ரோம் எக்ஸ்டென்ஷன்கள் உங்ககிட்ட இருக்கா?

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே, அமேசான் க்ரேட் இண்டியன் சேல் என அக்டோபர் மாதத்தை குறிவைக்கும் ஆன்லைன் நிறுவனங்களின் ஆஃபர்கள் நம்மை நெருங்க‌ துவங்கிவிட்டன. இதில் அளிக்கப்படும் ஆஃபர்கள் சரியாக தான் இருக்குமா? இல்லை விலையை ஏற்றி ஆஃபர்   என்கிறார்களா? என பல குழப்பங்கள் ஆன்லைன் பர்சேஸ் செய்பவர்களுக்கு இருக்கும். அவர்களே இந்த கேள்விகளுக்கு இந்த 3 கூகுள் க்ரோம் எக்ஸ்டென்ஷன்கள் மூலம் விடை காணலாம்.

1.BuyHatke:

பை ஹாட்கே எனும் இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தி 140 ஆன்லைன் வலைதளங்களில் உள்ள பொருட்களின் கடந்த காலங்களில் என்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என அறியலாம். கூகுள் க்ரோம் ப்ரெளசரில் இதனை இணைத்து கொள்ள முடியும். வலது புற ஓரத்தில் இதற்கான லோகோ தெரியும். வாங்க விரும்பும் பொருளின் பக்கத்திலும் வரைபடமாகவே இதன் கடந்த கால விலை வழங்கப்பட்டுவிடும்.

https://chrome.google.com/webstore/detail/buyhatke/jaehkpjddfdgiiefcnhahapilbejohhj?hl=en

2. MakkhiChoose:

மேக்கிச்சூஸ் என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் விலை எந்த தளத்தில் என்ன விலையில் கிடைக்கிறது. இதே பொருளின் விலை ஒவ்வோரு தளத்திலும் எவ்வளவு மாறியுள்ளது. என்பதையெல்லாம் துல்லியமாக ஒரே ஸ்க்ரீனில் காட்டிவிடும். இதன் ஐகான் இணையதள பக்கத்தின் விலைக்கு அருகில் இருக்கும் மவுஸை கொண்டு சென்றாலே அதன் வரைபடத்தை காட்டிவிடுகிறது.

https://chrome.google.com/webstore/detail/makkhichoose/gllmlkidgbagkcikijiljllpdloelocn?hl=en

3.ValueTag:

வேல்யூ டேக் எக்ஸ்டென்ஷன் மூலம் வாங்க நினைக்கும் பொருளின் பெஸ்ட் விலை என்ன அதனை மற்ற இ-காமர்ஸ் தளங்களோடு ஒப்பிட்டு என்ன விலை சிற‌ந்த விலை என்ற ரேட்டிங்கோடு தருகிறது.  ஒற்ரை க்ளிக்கில் மற்ற‌ தளங்களில் இருந்து விலையை ஒப்பிட்டு குறைவான விலையைக் கூறி பரிந்துரை செய்கிறது இந்த எக்ஸ்டென்ஷன். 

https://chrome.google.com/webstore/detail/valuetagtop-price-compare/jfmdbmmnlcopbmlkmilnhaabkffdnfjg

ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ