Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களுக்காக விவசாயம் பார்க்கும் இந்த App..! தமிழனின் ஹேக்கத்தான் சாதனை

ன்றைய இளைஞர்களுக்கு சமூக அக்கறை உண்டு. தொழில்நுட்ப விஷயங்களை மக்கள் முன்னேற்றத்துக்கு, மாற்றத்துக்கு அவர்களால் பயன்படுத்த முடியும் என்பதே விகடனின் நம்பிக்கை. அப்படி தொழில்நுட்ப அறிவும் சமூக மாற்றத்துக்கான தேடலும் கொண்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களைக் கொண்டு சமூகத்தின் அடிப்படையான பிரச்னைகளுக்கு சின்னச் சின்னத் தீர்வுகளைத் தேடுவதே விகடன் ஹேக்கத்தானின் கேம் பிளான். இந்த ஹேக்கத்தானில் உதித்த ஒவ்வொரு எண்ணமும் ஒரு ’ஸ்டார்ட்-அப்’புக்கானது (ஒரு ஸ்டார்ட்-அப் செயல்பாட்டின் அடிப்படை என்ன...? இறுதியில்!)   

Vikatan Hackathon Prototyping

ஆகஸ்ட் மாதம் முதலே இந்தியா முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களை அடையாளம் கண்டோம். அவர்களுடைய அபாரமான 380 ஐடியாக்களுடன் விகடன் ஹேக்கத்தானின் முதல் கட்டம் தொடங்கியது. 120 ஐடியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் இருந்து அபாரமான 40 ஐடியாக்கள், 140 பங்கேற்பாளர்கள் சல்லடையில் சலித்தெடுத்த பிறகு, ஹேக்கத்தானுக்கு பச்சைக்கொடி காட்டினோம்.

Vikatan Hackathon Hasura50 மணிநேரம் நடந்த விகடனின் ஹேக்கத்தானில் வேளாண்மை, மகளிர் சுய உதவிக்குழுக்கள், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒரு முக்கியப் பிரச்னைக்கான தீர்வின் முன்மாதிரியை(prototype) வடிவமைத்தது இளைய தலைமுறை.

கல்லூரி மாணவர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பலதரப்பட்ட போட்டியாளர்களுக்கும் பொதுவாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று சமூகத்தில் எப்படியாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது. இரண்டாவது தொழில்நுட்பத்தை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்தல். தொழில்நுட்பத்தில் நம் போட்டியாளர்கள் காட்டிய பன்முகத்தன்மையை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். ஒரு குழு நம் வீட்டு தண்ணீர் குழாயுடன் ஃப்ளோ ரேட் சென்சாரை இணைத்து நாம் எவ்வளவு நீரை வீணாக்குகிறோம் என புள்ளிவிபரங்களோடு காட்டியது. அதில் ஸ்மைலியும், தமிழில் ஒரு கருத்தையும் சேர்த்தது நடுவர் குழுவினரிடையே லைக்ஸ் அள்ளியது. அந்தக் குழு இரண்டாம் பிடித்து 50,000 ரூபாய் பரிசு பெற்றது.  Vikatan Hackathon Winner Premkumar

தன் முயற்சிக்கு அதிகமாக ஷேர்ஸ் வாங்கியது ’தனி ஒருவராக’ வந்திருந்த பிரேம் குமார். இவருடைய தொழில்நுட்பம் விவசாயத் துறையில் அபார மாற்றத்தை உண்டாக்கவல்லது என்ற நம்பிக்கை காரணமாக, நடுவர்கள் அவருக்கு முதலிட அங்கீகாரத்தைக் கொடுத்தார்கள். 75,000 ரூபாய் பரிசு!

என்ன செய்தார் பிரேம் குமார்?

சர்வதேச நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் பிரேம் குமார் ஏக்கர்கணக்கில் விவசாயம் செய்கிறார். விவசாயத்துக்கு ஆள் கிடைப்பது, மின்சாரம், நீர், உரம், பாசன வசதி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் பிரச்னைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டினார் பிரேம். இவை அனைத்துக்கும் தன் முன்மாதிரியில் தீர்வுகளை கோடிட்டுக் காட்டியிருந்தார் பிரேம் குமார். ’இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’ எனும் நடைமுறையின்கீழ் பிரேம்குமார் உருவாக்கியுள்ள தானியங்கி பாசன வசதி  தொழில்நுட்பம், விவசாயிகளுக்கு வரம். இவர் தரும் அப்ளிகேஷனை பயன்படுத்த, ‘உன்னைப் போல் ஒருவன்’ கமல் அளவுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. நம் வயல்பரப்பை அப்ளிகேஷனில் செட் செய்துவிட்டால் போதும். பருவ நிலை, மண்ணின் நீரப்பதம் போன்றவற்றை இணையம் மற்றும் சென்சார்கள் மூலம் தெரிந்துகொள்ளும் இந்த தொழில்நுட்பம் தானாகவே சொட்டு சீர் பாசனத்தை இயக்குகிறது. பிரேம்குமாருடைய தொழில்நுட்பத்தின் மொத்த செலவும் வெறும் 5,000 ரூபாய்க்குள் அடங்குகிறது. இன்னும் விசேஷம் என்னவென்றால், இந்த  சாதனம் உருவாக்க தேவைப்படும் அனைத்து பாகங்களும் அமேசான் போன்ற வலைதளங்களிலேயே கிடைக்கிறது. இவற்றையும்விட முக்கியமானது இவருடைய அப்ளிகேஷனை ஓபன் - சோர்ஸில் வெளியிட உள்ளார் என்பது. 

வாழ்த்துகள் பிரேம்!

விகடன் ஹேக்கத்தான் எப்படி துவங்கியது? ஹேக்கத்தானில் முதலிடம் வென்ற பிரேம் குமார் என்ன சொல்கிறார்? ஒரு குட்டி வீடியோ!

 

 

 

ர. ராஜா ராமமூர்த்தி

புகைப்படம் - தி. குமரகுருபரன்

உங்களிடம் ஐடியா இருக்கிறதா?

எப்போதும் ஐடியா தோற்றுப் போவதில்லை; அதைச் செயல்படுத்தும் விதத்தில்தான் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இப்போது ஐடியாக்களுடன் களமிறங்கும் ஸ்டார்ட்-அப்ஸ்தான் ட்ரெண்டிங். ஆனால், ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அடுத்து என்ன செய்வது? எப்படி வெற்றி பெறுவது?

 

அதற்குத்தான் இந்த 10 பாயின்ட்ஸ் இன்போகிராஃப்!

Top 10 Tips for Startups - Vikatan Hackathon

 

ஆக்கம் - ரெ.சு.வெங்கடேஷ்; கலை - ஆரிஃப் முகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close