Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 மணிக்கு அலுவலகம் விட்டுக் கிளம்ப உதவும் மூன்று APP-கள்!

காலைல 10 மணி ஆபீஸுக்கு ட்ராஃபிக் பயத்துனால 9 மணிக்கே வந்துட்டேன். ஆனா 5 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சும் என்னால வேலைய முடிக்க முடியல என அவதிப்படுபவரா நீங்கள்? அப்ப உங்கள் போன் மற்றும் டெஸ்க்டாப்ல இந்த 3 ஆப்ஸ் இருக்கானு செக் பண்ணிக்கங்க. 

1.மொமண்டம்:

இது ஒரு க்ரோம் எக்ஸ்டென்ஷன். அத இன்ஸ்டால் செஞ்சுட்டா க்ரோம்ல நீங்க ஓப்பன் பண்ணுற ஒவ்வொரு புது டேப்லயும், ஒரு மோட்டிவேஷனல் தத்துவம். இன்னிக்கு முடிக்க வேண்டிய வேலை என்ன பார்க்க வேண்டிய லின்க் என்ன? எல்லாத்தையும் நியாபகப்படுத்திட்டே இருக்கும். சில வேலைகள நாம மறந்துடுறோம். ஆனா இது உங்கள மறக்க வைக்காது. கிட்டத்தட்ட ஒரு பர்சனல் அசிஸ்டெண்டாவே மாறி உங்களுக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சுடும்.

https://chrome.google.com/webstore/detail/momentum/laookkfknpbbblfpciffpaejjkokdgca

2. இன் 5:

பிஸியான வேலைகளுக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய நினைப்பவர்கள் பல்வேறு சமூக வலைதளங்களுக்குள் சென்று அங்கேயே மணிக்கணக்கில் தங்கிவிடுகிறார்கள். இதனால் அலுவலக வேலை மட்டுமல்ல, தனிப்பட்ட வேலைகள்கூட பாதிப்படையும். இதைத் தடுக்கிற வேலையை செய்வதுதான் இந்த ஆப்ஸ். இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்துவிட்டால், எந்த சமூக வலைதளத்திலும்  சரியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்களை இருக்க அனுமதிக்காது. காரணம், ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு நீங்கள் பார்க்கும் சமூக வலைதளத்தை உங்கள்  திரையிலிருந்து இந்த ஆப்ஸ் மறைத்துவிடும்.

https://play.google.com/store/apps/details?id=sariodev.in5.app

3.பாக்கெட்:

வேலை நிமித்தமாகவோ அல்லது பர்சனலாவோ ஆன்லைனில் சில விஷயங்களை பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற ஆசையில் அலுவலக நேரத்தில் உட்கார்ந்து சீரியஸாக படிப்போம். அந்த நேரத்தில் நடக்க வேண்டிய வேலை பாதிக்கும். ஆனால் பாக்கெட் ஆப்க்கு இதனை ஒரே க்ளிக்கில் மூவ் செய்ய முடியும் அப்படி செய்தால். இன்று நீங்கள் படிக்க வேண்டிய லின்க்குகளை நீங்கள் பயணிக்கும்போது அல்லது வீட்டுக்கு சென்று ஓய்வு நேரம் கிடைக்கும் போது படிக்க முடியும். 

https://getpocket.com/

இந்த மூன்று ஆப்ஸ்கள் உங்கள் நேரத்தை சேமிப்பதோடு உங்கள் வேலைகளை நினைவுபடுத்தி முடிக்கவும் வைக்கின்றன. அப்பறம் என்ன பாஸ் 6 மணிக்கு மேல ஆபீஸ்ல என்ன வேல! கெத்தா கிளம்புங்க பாஸ்!

- ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ