Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 மாதங்களில் 3 பில்லியன் டாலர்களை இழக்கும் சாம்சங்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் செல்போன் தீ பிடிக்கும் பாதிப்புக்கு உள்ளாவதால், அந்த மாடல் போன்கள் திரும்பப் பெறப்படுகிறது. இதனால், அடுத்த 6 மாதங்களில் தனது லாபத்தில் 3 பில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது லாபத்தில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் இந்த ஆண்டின்  3-ஆவது காலாண்டில் குறையும் என்று கூறி சாம்சங் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த இழப்பானது, போன்களை திரும்பப் பெறும் நடவடிக்கையால் ஏற்படும் நேரடிச் செலவுகள் மற்றும், இரண்டரை மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டிய பணம் ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட் 7 மாடல் செல்போன் பேட்டரியில் உள்ள பிரச்சனை காரணமாக, தீ பிடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இதன் விற்பனை நிறுத்தப்படுவதாகவும், அவை திரும்பப் பெறப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ