Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக், கூகுள் அலோவில் உங்கள் சாட் ரகசியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றைக்கு சாப்பிடாமல் கூட இருந்து விடுவார்கள். ஃபேஸ்புக்கில் சாட் செய்யாமல் இருக்க மாட்டார்கள். ஜென் Z-களின் தவிர்க்க முடியாத பொழுதுபோக்காகியுள்ளது சமூக வலைதளங்கள். இதில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக்கிலும், அதற்கு போட்டியாக கூகுள் அறிமுகம் செய்துள்ள கூகுள் அலோவிலும் நீங்கள் செய்யும் சாட் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஃபேஸ்புக்:

மெஜென்ஜரில் நீங்கள் சாட் செய்யும் நபரை தேர்ந்தெடுங்கள். மெஜென்ஜரின் வலது ஓரத்தில் க்ளிக் செய்தால் சீக்ரர் கான்வர்ஷேஷன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யுங்கள். அதின் பின் அதில் தெரியும் நிமிட ஆப்ஷனை செலக்ட் செய்தால் 5 நொடி துவங்கி ஒரு நாளுக்குள் நீங்கள் அனுப்பிய செய்தி சம்பந்தப்பட்ட நபர் படித்தவுடன் மறைந்துவிடும். இந்த கால அளவை நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். தற்போது உங்கள் சாட் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். லாக் போடாமல் போனை யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்துவிட்டு போகலாம் அவ்வளவு ரகசியமாக இருக்கும் உங்கள் சாட் என்கிறது ஃபேஸ்புக்.

          

கூகுள் அலோ:

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களுக்கு போட்டியாக கூகுள் அறிமுகம் செய்திருக்கும் கூகுள் அலோவிலும் உங்கள் சாட் ரகசியத்தை பாதுகாக்க முடியும். கூகுள் அலோவில் இன்காக்னிட்டோ மோட் ஆன் செய்து சாட் செய்தால் தானாகவே அந்த செய்தி  5 நொடி துவங்கி ஒரு வாரம் வரை நாம் தேர்வு செய்யும் நேரம் வரை மட்டுமே எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியும். அதன் பின் தானாகவே அந்த தகவல் மறைந்துவிடும்.

       

இனிமே ஆபிஸ் சீக்ரெட் ஆரம்பிச்சு ரகசியமா நண்பர்களிடம் யார்கிட்டயும் சொல்லாதனு சொல்லுற விஷயம் வரை எல்லாத்தையும் பாதுகாப்பா அனுப்புங்க பாஸ்.
 

- ச.ஸ்ரீராம்
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close