Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிள் 'ஏர்-பாட்ஸ்' இந்தியாவுக்கு வர தாமதமாகும்..?

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-ஃபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வகை ஃபோன்களை அறிமுகம் செய்தபோது, அதன் புதிய வகை 'இயர் ஃபோன்களான' ஏர்-பாட்ஸ்-யும் அறிமுகம் செய்தது. இதன் விலை இந்திய மதிப்பில் 15,400 ரூபாய் என அறிவித்திருந்தது. எப்போது இந்த இயர் ஃபோன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாத நிலையில், அதன் வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.


இது குறித்து ஆப்பிள் நிறுவனம்,'ஏர்-பாட்ஸ்க்கு இதுவரை வந்துள்ள வரவேற்பு மிரட்சியளிக்கிறது. இருப்பினும், தரமான பொருளை தருவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளப்படலாம்' என்று கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ