Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜியோ விவகாரம்: ட்ராய்க்கு, ஏர்டெல் கோரிக்கை

ஜியோவுக்கு சரியான இணைப்பு  கொடுக்காத விவகாரத்தில் ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ட்ராய்  பெனால்ட்டி விதித்தது. இந்நிலையில் ஜியோவுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச கால் ஆஃபரால் தனது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் ட்ராயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து, ஏர்டெல், ட்ராயிடம் வைத்துள்ள கோரிக்கையில், "ஜியோவின் சமச்சீர் இல்லாத மற்றும் நம்பமுடியாத இலவச கால்ஸ் ஆஃபரால் ஏர்டெலின் வாடிக்கையாளர்களது அனுபவங்கள் மோசமடைந்துள்ளன. இதனால் ஏர்டெல் நெட்வொர்க்குக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வரை ஜியோவுக்கு 17,000 இலவச கால்ஸ் இணைப்பு புள்ளிகளை ஏர்டெல் வழங்கியுள்ளது. குறிப்பாக 7,000 இணைப்புகள் கூடுதலாகவே வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 75,000 மில்லியன் ஜியோ பயனாளர்கள் பயனடைவார்கள். ஆனால், தற்போது 25,000 மில்லியன் ஜியோ பயனாளர்களே இதை பயன்படுத்துகிறார்கள். எனவே, இதை கவனத்தில் கொண்டு ஜியோவுக்கு ஏர்டெல் தரும் இணைப்பை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள்" என்று கூறியுள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

கேட்ஜெட்ஸ் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close