Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாம்சங்கின் 'bendable phones'..!?

சாம்சங் வெகு நாட்களாகவே புதிய வகை 'பெண்டபல் ஃபோன்களை' உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில இணைய தளங்களில், பெண்டபல் ஸ்கிரீனுடைய சாம்சங் ஃபோன்களின் டிசைன் என்று சில படங்கள் வெளியாகியுள்ளது.


இது சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அந்நிறுவனத்தின் ஃபோனின் டிசைன் தான் இது என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.


இதுவரை ஸ்க்ரீனை மடிக்கும் படியான வடிவுள்ள ஃபோன்கள் வராத நிலையில், இந்த ஃபோன்கள் வந்தால், மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன்கள் 2017ல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சாம்சங் நிறுவன ஃபோன்களை சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே வெடித்தது, அந்நிறுவனத்தின் சந்தையை வெகுவாக பாதித்துள்ள நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கம்-பேக் இந்த புதிய வகை ஃபோன்களின் மூலம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close